வானிலை

வங்கக்கடலில் இன்று உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி-வானிலை ஆய்வு மையம்…!

வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த மே 13 ஆம் தேதி அரபிக்கடல் மற்றும் அதையொட்டிய லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி கடந்த  15 ஆம் தேதி  ‘டவ்-தே’ புயலாக மாறியது.இது அதி தீவிர புயலாக வலுப்பெற்று சவுராஷ்டிராவில் கடந்த 17 ஆம் தேதி கரையை  கடந்தது.இந்த ‘டவ்-தே’ புயலானது, மகாராஷ்டிரா,கர்நாடகா,குஜராத் உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. […]

#Cyclone 3 Min Read
Default Image

‘டவ்-தே’ புயல்: 17 பேர் உயிரிழப்பு..!16,500 வீடுகள் சேதம், 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன…!

குஜராத்தில் ‘டவ்-தே’ புயலால் 17 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும்,16,500 வீடுகள் சேதம் மற்றும் 40,000 க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தன. அரபிக் கடலில் கடந்த வாரத்தில் உருவான ‘டவ்-தே’ புயலால் கடந்த சில நாட்களாக கேரளா, கர்நாடகா, கோவா, டையூ,டாமன் மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வந்தது.இந்நிலையில் இந்த புயல் நேற்று முன்தினம் இரவு, குஜராத் மாநிலத்தின் போர்பந்தர்-மாகுவா இடையே கரையை கடந்தது. அவ்வாறு,புயல் கரையைக் கடந்தபோது மும்பை மற்றும் குஜராத்தின் கடலோர […]

#Gujarat 4 Min Read
Default Image

அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்கும் ‘டவ்-தே’ புயல்- இந்திய வானிலை மையம் அறிவிப்பு..!

அதிதீவிர புயலான ‘டவ்-தே’ புயல் அடுத்த மூன்று மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குஜராத்தில்,சவுராஷ்டிரா கடற்கரையின் டியு மற்றும் உனா இடையே நேற்று இரவு 9 மணியளவில் கரையை கடக்க தொடங்கிய அதிதீவிர ‘டவ்-தே’ புயல் செவ்வாய்க்கிழமை காலை 12 மணியளவில் முடிவடைந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.’டவ்-தே’ புயலுக்கு முன்னர் மாநில அரசு இரண்டு லட்சம் பேரை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றியது. இதுகுறித்து,இந்திய வானிலை ஆய்வு மையம் […]

#Gujarat 4 Min Read
Default Image

மே 16 ஆம் தேதி அரபிக்கடலில் உருவாகும் “தக்டே புயல்”;மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்…!

அரபிக்கடலில் மே 16 ஆம் தேதி “தக்டே” என்ற புயல் உருவாக வாய்ப்புள்ளது எனவும்,அவ்வாறு உருவாகினால் மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் தற்போது அக்னி நட்சத்திரம் என்பதால் வெயிலின் தாக்கம் அதிகமாகவுள்ளது. இந்நிலையில்,அடுத்த இரு நாட்களில் அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது,வருகின்ற […]

Arabian Sea 4 Min Read
Default Image

மேற்கு ஆப்கானிஷ்தானில் தொடர் மழை மற்றும் வெள்ளத்தில் 12 பேர் பலி……

மேற்கு ஆப்கானிஷ்தானில் தொடர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக 12 பேர் பலி! பெண்கள் உட்பட குழந்தைகள் உயிரிழப்பு…. மேற்கு ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளில் கடந்த சில வாரங்களாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், ஆப்காணிஸ்தான் மேற்கு மாகாணமான ஹெராட்டின் பகுதியில் தொடர் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, அதில் குறைந்தது 12 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியானதாக உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும் ஹெராத் மாகாணத்தில் அட்ராஸ்கான் மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களில் திங்கள்கிழமை […]

#Afghanistan 4 Min Read
Default Image

தமிழகத்தில் இன்று முதல் ஆரம்பமாகும் கத்தரி வெயில்..!

தமிழகத்தில் இன்று முதல் மே 29 ஆம் தேதி வரை கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரமானது ஆரம்பமாகிறது. ஒவ்வொரு வருடமும் கோடைகாலத்தில் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயிலானது ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் நீடிக்கும்.. தமிழகத்தின் ஒவ்வொரு நாளும் கோடை வெயிலின் தாக்கமானது அதிகரித்து வரும் நிலையில்,அதன் உச்ச நிலையான கத்தரி வெயில் என்ற அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கி மே 29-ம் தேதி வரை நீடிக்கவுள்ளது.கத்திரி வெயிலின் தாக்கம் கடந்த ஆண்டை […]

From today till May 29 3 Min Read
Default Image

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு…!

4 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு.  தமிழகத்தில் கடுமையான வெயில் வெளுத்து வாங்கும் நிலையில், கடந்த சில நாட்களாக சில இடங்களில், மக்கள் மனத்தை குளிர்விக்கும் வண்ணம் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்துக்கு, கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

#Rain 2 Min Read
Default Image

கடற்கரையோரம் நடந்து சென்ற பெண்ணை கோடீஸ்வரியாக்கிய விலையுயர்ந்த பொருள்….!

தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்ற பெண்ணுக்கு கிடைத்த திமிங்கலத்தின் வாந்தி.  பொதுவாக கடல் என்றாலே பல விதமான பொக்கிஷங்களை தன்னுள் அடக்கிய ஒன்று என்றுதான் கூறமுடியும். அந்த வகையில், தாய்லாந்து நாட்டில், சிரிப்பான் என்ற பெண் கடற்கரையில் காலாற நடந்து சென்றுள்ளார். அப்போது அவர் அந்த கடற்கரையோரம் வித்தியாசமான ஒரு பொருள் ஒதுங்கி கிடப்பதை கண்டு, அருகில் சென்று பார்த்த அவருக்கு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது. அது வேறொன்றும் இல்லை. […]

thayland 3 Min Read
Default Image

#Breaking: “வடகிழக்குப் பருவமழை ஜனவரி 12 வரை நீடிக்கும்”- சென்னை வானிலை ஆய்வு மையம்!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும்,  தென் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் […]

#Rain 4 Min Read
Default Image

அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் – வானிலை மையம் எச்சரிக்கை !

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்து 2 நாட்களுக்கு மழை தொடரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த புரேவி புயலானது, இலங்கையில் கரையை கடந்த நிலையில், மன்னார் வளைகுடாவில் நுழைந்து, தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்தது.ராமநாதபுரத்திற்கு அருகில் நிலைகொண்டுள்ள இந்த புயலானது, வலுவிழந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இருந்து  தற்போது வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. ராமநாதபுரம் வழியே கடந்து மேற்கு தென்மேற்காக நகர்ந்து தெற்கு கேரளாவை அடையும் என […]

#RainFall 3 Min Read
Default Image

#Burevi Cyclone: டிச.4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்!

5 மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், டிச.4ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக்கடலில் புதியதாக உருவாகவுள்ள புரவி புயலானது, நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும. இந்த புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து, பின்னர் குமரி பகுதிக்கு வருகிறது. இந்நிலையில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் […]

#Fisherman 2 Min Read
Default Image

#Burevi Cyclone : டிச.3ம் தேதி 5 மாவட்டங்களில் அதீத கனமழைக்கு வாய்ப்பு!

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, புதுக்கோட்டையை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 5 மாவட்டங்களிலும், கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக் கூடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நிவர் என்னும்  புயல் கரையை கடந்த நிலையில், இந்த புயலினால் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் மறையவில்லை. அதற்குள்ளாக தற்போது வங்கக்கடலில் புதியதாக உருவாகவுள்ள புரவி புயலானது, நாளை இலங்கை திரிகோணமலை அருகே கரையை கடக்கும. இந்த புயல் மன்னார் வளைகுடா பகுதிக்கு வந்து, பின்னர் குமரி பகுதிக்கு […]

#Heavyrain 2 Min Read
Default Image

‘நிவர் புயல்’ – யார் இந்த பெயரை சூட்டியது! இதன் பின்னணி என்ன?

தமிழகம் மற்றும் புதுச்சேரியை அச்சுறுத்திக் கொண்டிருக்கு நிவர் புயலுக்கு பெயர் சூடிய நாடு எது? அந்த பெயரின் பின்னணி என்ன? வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள நிவர் புயலானது, தமிழகம் நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயலானது புதுச்சேரியில் கரையை கடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள  நிலையில், புயல் கரையை நெருங்க நெருங்க அதன் பாதை வடமேற்கு நோக்கி மாறலாம் என சொல்லப்படுகிறது. நாளை கரையை கடக்கும் புயலுக்கு பெயர் சூட்டப்பட்டது எந்த நாடு என்றும் அதன் பின்னணி […]

NivarCyclone 6 Min Read
Default Image

புயல் எப்படி உருவாகிறது? எவ்வாறு கரையை கடக்கிறது? – வாங்க பார்க்கலாம்

புயல் எவ்வாறு உருவாகிறது, கரையை கடக்கும் முன் இது எந்தெந்த நிலையில் கடந்து வருகிறது. எவ்வாறு இந்த புயல் கரையை கடக்கிறது என்று பார்க்கலாம். இன்று பலருக்கும் புயல் எப்படி உருவாகிறது? எப்படி கரையை கடக்கிறது? என தெரிவதில்லை. காற்றின் நகர்விற்கு வானிலை ஆய்வாளர்கள் சூட்டியுள்ள பெயர் ‘சலனம்’. ஈரக்காற்றை பொறுத்தவரையில், அது வெகு உயரம் செல்லாமல், வானில் தாழ்விடங்களில் தாங்கும். இதனால், காற்றின் அழுத்தம் அதிகரிப்பதால், காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகிறது. இந்த காற்றானது மணிக்கு […]

storm 4 Min Read
Default Image

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு. தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே, தமிழகத்தில் சில இடங்களில் கனமழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. இதனால், மக்களுக்கு நீராதாரமாக விளங்க கூடிய முக்கியமான ஏரிகள் நிரம்பி வருகிறது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகி உள்ள நிலையில், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த […]

#Rain 2 Min Read
Default Image

தொடர்மழை…! கனமழையாக உருவெடுக்கும் – வெதர்மேன்

தொடர்மழையானது விட்டுவிட்டு,  கனமழையாக பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் பரவலாக மலை பெய்து வருகிறது. இதுகுறித்து வெதர்மேன் கூறுகையில், தூத்துக்குடி, நெல்லை  மற்றும் கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. தற்போது மழை பெய்யவில்லை என்றாலும், நாளை காலை மழை இரண்டு மடங்காக பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளார். நாமக்கல் சேலம், ஈரோடு மற்றும் தருமபுரி ஆகிய மாவட்டங்களில் மாலை தொடங்கியுள்ளது. தெற்கு மாவட்டங்களான மதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை போன்ற […]

#Rain 2 Min Read
Default Image

#Rain Alert : 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு!

6 மாவட்டங்களில் கனமழை பெய்யவுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.  கடந்த சில நாட்களாகவே பல மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனையடுத்து, குமரி கடல் முதல் அந்தமான் கடல் பகுதி வரை மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 அணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை வரை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,  சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் […]

#Heavyrain 2 Min Read
Default Image

காவிரி டெல்டா பகுதிகளில் கன மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….

காவிரி டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகத்தின் ஆறு  மாவட்டங்களுக்கு இன்று மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இந்நிலையில், முதல் நாளிலேயே தலைநகர் சென்னையில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் இன்று தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை […]

including the Cauvery delta 2 Min Read
Default Image

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களுக்களூக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. மத்திய மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டுள்ளதாகவும் அதனோடு மேலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுவதாக மையம் தெரிவித்துள்ளது. இதனால் சேலம்,தர்மபுரி,கிருஷ்ணகிரி,கள்ளக்குறிச்சி ,திருவண்ணமாலை ,காஞ்சிபுரம்,வேலூர், ராணிபேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

#Meteorological Center 2 Min Read
Default Image

சென்னையில் கனமழை…மக்கள் மகிழ்ச்சி

சென்னையில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட மாவடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில் கடந்த ஒரு சில தினங்களாகவே தமிழகமெங்கும் அநேக மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தலைநகர் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.அதன்படி சென்னையில் எழும்பூர், பாரிமுனை, கோயம்பேடு, வடபழனி, மெரினா, ராயப்பேட்டை, காசிமேடு, கோடம்பாக்கம், சூளைமேடு, ஐயப்பன்தாங்கல், வானகரம், […]

#Chennai 2 Min Read
Default Image