#Breaking:கரையை கடந்தது காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்

The Depression over southwest Bay of Bengal moved

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் முழுமையாக கரையை கடந்தது.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று அதிகாலை 3-4 மணி அளவில் புதுச்சேரி மற்றும் சென்னைக்கு இடையே கரையை கடந்தது.இது தற்பொழுது வட தமிழகம் மீது நிலைக்கொண்டுள்ளது இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து படிப்படியாக வலுவிழக்கக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் விடப்பட்டிருந்த ரெட் அலெர்ட் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும்,மீனவர்களுக்கான எச்சரிக்கை இன்று மதியம் வரை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

unknown node