எச்சரிக்கை...இன்று இந்த 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

The Chennai Meteorological Department has issued a Red Alert for 5 districts today.

இன்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று கீழ்க்கண்ட இந்த 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நீடிப்பதால் நெல்லை, தென்காசி,தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்த நிலையில்,இன்றைய தினமும் மழை நீடித்து வருகிறது.

இந்நிலையில்,இன்றும் மிக பலத்த மழை தொடரும் என்று 5 மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மற்றும் நாகை ஆகிய மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை  விடுக்கப்பட்டுள்ளது.