தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவி வருவதால் மக்கள் தண்ணீரின்றி தவித்து வருகின்றனர்.தமிழ்நாட்டின் தலைநகரமாம் சென்னை அதுவும் சிங்கார சென்னை இன்று நீருக்கு சிரமப்படுவதை #தவிக்கும் _தமிழ்நாடு என்ற ஹேஷ்டேக் முலம் உலகமே உற்று நோக்கும் அவலம் தமிழகத்திற்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திற்கு அடுத்த மூன்று மாதத்திற்கு மழை கிடையாது அதுவும் சென்னைக்கு கொஞ்சம் கஷ்டம் தான் என்று கூறியது வானிலை மையம். இந்நிலையில் மக்களின் தாகத்தை தணிக்கும் விதமாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது வானிலை ஆய்வு […]
கேரளாவில் தென்மேற்கு பருவ மழையானது நாளை முதல் தொடங்கக்கூடும் என்று சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், தென்கிழக்கு அரபிக் கடலில் தென்மேற்கு பருவக்காற்று வலுவடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார். வருடம் தோறும் தென்மேற்கு பருவமழையால் கேரளா மட்டுமல்லாது தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டியுள்ள மாவட்டங்களும் பயனடையும்.இனிநிலையில் இந்த ஆண்டு பருவ மழையானது ஜூன் 2 ம் தேதியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காற்றின் வேகம் இல்லாததால் தொடர்ந்து தாமதமாகி வந்தது.இப்போது காற்றின் வேகம் […]
ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கொட்டி தீர்க்கும் மழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அங்கு பெய்து வரும் கனமழை காரணமாக ஆண்டிப்பட்டியில் மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் தற்போது பல இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.மழையின் வரவால் வெப்பம் தணிந்து உள்ளதால் மக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்திய வானிலை ஆய்வு மைய தலைவராக விஞ்ஞானி மிருத்யுதின் ஜெய் மொகபத்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்திய வானிலை ஆய்வு மையத்தின் விஞ்ஞானி யாக இருந்து வந்த மிருத்யுதின் ஜெய் மொகபத்ரா தற்போது இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்நிலையில் ஆகஸ்ட் 1 தேதி தனது பதவியை ஏற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை ,வேலூர் மற்றும் அபினாசி சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் அவினாசி மற்றும் சுற்றுவட்டாரங்களில் கனமழை பெய்து வருகிறது.மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது கனமழை பெய்து வருகிறது மதுரை மாவட்டம் மேலூர் ,கொட்டாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.இதனால் வெப்பம் தணிந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
கத்தரி வெயில் வாட்டி எடுத்த நிலையில் தற்போது வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்தாவது,வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, சேலம், திருச்சி, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, மதுரை […]
வடஇந்தியாவில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருப்பதால் ஜூன் 5 ம் தேதி வரை ரெட் அலார்ட் எச்சரிக்கை விடப்படுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வட மாநிலங்களான உத்திர பிரதேசம்,பஞ்சாப்,ராஜஸ்தான்,சட்டத்தீஷ்கர் மற்றும் டெல்லி ஆகிய இடங்களில் வழக்கத்தை விட இந்த ஆண்டு கூடுதலாக வெப்பம் மக்களை வாட்டிவதைத்து வருகிறது. இந்நிலையில்,ஜூன் 2 ம் தேதிக்கு பின் அனல் வெப்பக்காற்று அதிகமாகி புழுதிப்புயல் வீசக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.எனவே பொதுமக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் ரெட் அலார்ட் […]
இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எப்போது தொடங்கும் என தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆறாம் தேதி தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என கூறியுள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை ஜூன் முதல் தேதியில் இருந்து கேரளாவில் பெய்ய ஆரம்பிக்கும். ஆனால், இந்த ஆண்டு ஐந்து நாட்கள் தாமதமாகியுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்ட தேதியில் மழை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த […]
வாங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுநிலை ஃபானி புயலாக வலுப்பெற்று ஒடிசாவை சூறையாடி சென்றது. அவ்வாறு கரையை கடக்கும் போது தமிழகத்திற்கு மழை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது பொய்த்துப்போய், புயல் கரையை கடக்கும் போது, இங்குள்ள ஈரப்பத காற்றையும் ஈர்த்துவிட்டு சென்றதால் இங்கு மழைக்கு வாய்ப்பில்ல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தில் அனல்காற்று வீசி, வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படும் என கூறப்பட்டது. ஏற்கனவே தமிழகத்தில் அக்னி நட்சத்திர வெயில் […]
இந்திய பெருங்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள தென்மேற்கு வாங்க கடலில் வரும் 25-ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தமிழக கடற்கரை நோக்கி நகர்ந்து 29-ம் தேதி புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், புயல் உருவாகும் தினத்தில் கடற்கரை ஒட்டியுள்ள பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல், இந்திய பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால், இன்று தமிழகத்தில் சில இடங்களில் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று தொடங்கி 24-ம் தேதி வரையிலும் தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தென்தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அடுத்த மூன்று நாட்களுக்கு உல் தமிழகத்தில் இயல்பை விட 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும், வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்தமிழகத்தில் இயல்பாய் விட வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. உள்தமிழகத்தில் இயல்பை விட 2 அல்லது 3 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை அதிகம் இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும் காற்றின் திசையில் மாறுபாடு காணப்படுவதால், தமிழகம மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் லேசான மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது.கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் அதிகபட்சமாக எங்கும் மழை பதிவாகவில்லை என்றும் சென்னை வானிலை மையம் […]
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு, மழை பெய்ய வாய்ப்பில்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வறண்ட வானிலையே காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யவில்லை என்றும் வறண்ட வானிலையே காணப்பட்டது என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 31 […]
தமிழகம், புதுச்சேரியில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இன்று லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஒரு சில பகுதிகளில் மழைக்கான வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்ககடலில் புதிய காற்றழுத்தம் உருவாகியுள்ளதால் 25ம் தேதிவரை தென் தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்றும், வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து இருந்தது. இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், திருக்கருகாவூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. ஒருமணி […]
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை முதல் கன மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவித்துள்ளது. கனமழை நாளைவரை நீடிக்கும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் […]