தமிழகத்தில் 4 மணி வரை இந்த 22 மாவட்டத்துக்கு மழை எச்சரிக்கை!

சென்னை : தமிழகத்தில் 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில், இந்த கோடை காலத்திலும் பல மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கனமழை வெளுத்து வாங்கிக்கொண்டு வருகிறது. அந்த வகையில், இன்று ( மே 20) மாலை 4 மணி வரை 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
அதன்படி, அரியலூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, மதுரை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தஞ்சாவூர், தேனி, திருவாரூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், விருதுநகர் ஆகிய 22 மிதமான மழைக்கு வாய்ப்பு.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் வானிலை மையம் தகவல்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025