தென்மேற்கு பருவமழை: எந்தெந்த மாநிலங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை.!

இந்த ஆண்டு, அரபிக்கடலில் உருவான பிபர்ஜாய் புயல் காரணமாக பருவமழை தொடங்குவதை தாமதப்படுத்தியுள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பு:
அடுத்த ஐந்து நாட்களில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரகண்ட் ஆகிய இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை பரவலாக மழை பெய்யக்கூடும். இமாச்சலப் பிரதேசத்தில் நேற்று முதல் 29 வரையிலும், கிழக்கு ராஜஸ்தானில் ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளிலும், உத்தரகாண்டில் ஜூன் 29 மற்றும் 30ஆம் தேதிகளிலும் கனமழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் கேரளா மற்றும் மாஹேவில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். கடலோர கர்நாடகாவில் ஜூலை 1 வரை கனமழை பெய்யும். இதனால், பல மாநிலங்களுக்கு மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறையும் மழை அளவு:
தென்மேற்கு பருவமழை தாமதம் காரணமாக நாடு முழுவதும் ஜூன் மாதத்தில் கடந்த ஆண்டை விட 30% மழை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்ட அளவும் குறைந்து வருவதாக கூறப்படுகிறது.
பிபர்ஜாய் புயலால், வடமேற்குப் பகுதியைத் தவிர நாடு முழுவதும் இயல்பை விட குறைவான மழையே பெய்துள்ளதாகவும் ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டு மழை அளவு குறைவாக பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மழை நிலவரம்:
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
லேட்டஸ்ட் செய்திகள்
யானை சின்னம்: தவெக கொடிக்கு தடை கோரிய வழக்கு வாபஸ்.!
July 11, 2025
புதுச்சேரியில் புதிதாக 3 நியமன எம்எல்ஏக்கள் அறிவிப்பு.!
July 11, 2025
பழனி செல்லும் பக்தர்கள் கவனத்திற்கு!! 31 நாள்களுக்கு ரோப் கார் இயங்காது – நிர்வாகம் அறிவிப்பு.!
July 11, 2025