rain [File Image]
Weather Update : தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து கொண்டு இருக்கும் நிலையில் பல மாவட்டங்களில் வெப்பநிலை சதம் அடித்து வருகிறது. ஒரு சில இடங்களில் மிதமான மழையும் பெய்துகொண்டு இருக்கிறது. நேற்று கூட ஏற்காடு, தருமபுரி, சூளகிரியில் கூட மழை பெய்தது. இந்த நிலையில், இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், வடதமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கூறியுள்ளது.
வெப்பநிலையை பொறுத்தவரையில் இன்றும் நாளையும் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் எனவும், சில இடங்களில் இயல்பை விட 9 டிகிரி செல்சியஸ் உயரும் எனவும் இதனால் தமிழ்நாட்டிற்கு இன்றும் நாளையும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் எனவும் சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது.
விழுப்புரம் : பாமக கட்சியில் ஏற்கனவே ராமதாஸுக்கும் அவருடைய மகன் அன்புமணிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு இருப்பது உட்கட்சி பிரச்சினையாக…
சென்னை : தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரகம், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் வகுப்பறைகளை ‘ப’ வடிவில் மாற்றி அமைக்க…
சிவகங்கை : மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலில் தற்காலிக ஊழியராகப் பணியாற்றிய அஜித்குமார் என்ற இளைஞர், நகை…
சென்னை : இசையமைப்பாளர் இளையராஜா, நடிகை வனிதா விஜயகுமார் தயாரித்து நடித்த ‘Mrs & Mr’ திரைப்படத்தில் தனது ‘ராத்திரி…
குஜராத் : மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் (விமான எண் AI171) லண்டன் கேட்விக் விமான நிலையத்திற்கு புறப்பட்ட…
சென்னை : மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, ஏற்கனவே, கடந்த ஜூலை 2-ஆம் தேதி சென்னையில் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.…