கர்நாடக சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு சென்றவாரம் நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில் காலம் தாழ்த்தப்பட்டதால் வாக்கெடுப்பு நடைபெறாமல் போனது. இது குறித்த எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் புகாரளித்தனர். ஆளுநரும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கெடு விதித்து இருந்தார். ஆனால் கெடுவையும் தாண்டி விவாதம் நடைபெற்றதால் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவில்லை. தற்போது விடுமுறை நாளை அடுத்து இன்று சட்டசபை கூடவுள்ளது. இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்து சுயேச்சை எம்எல்ஏக்கள் நாகேஷ், ஷங்கர் என […]
சென்னை விமான நிலையத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 23 ஆண்டுகளுக்குப் பின்னர் மாநிலங்களவையில் உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள இருக்கிறேன். தமிழகம் பல்வேறு அபாயங்களை எதிர்நோக்கியிருக்கிறது. மேகதாது அணை கட்டுவதன் மூலம் காவிரி அடியோடு பாழாகிவிடும் ஹைட்ரோகார்பன் திட்டத்தின் மூலம் தமிழகம் மெதுவாக சஹானா பாலைவனமாக மாறும் வாய்ப்புகள் இருக்கிறது என்று தெரிவித்தார்.
தேனி பொதுக்கூட்டம் நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தங்கதமிழ்ச்செல்வனை ஏற்கனவே திமுகவில் தூண்டில் போட்டு இழுக்க முயற்சித்தோம், ஆனால் நடக்கவில்லை தற்போது நடந்துவிட்டது. அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் இனி திமுகவில் இணைய வேண்டும். எம்ஜிஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவினருக்கு மதிப்பு இல்லை. தாய் மொழியாம் தமிழ்மொழிக்கு எந்த சூழ்நிலையிலும் ஆபத்து வந்து விட கூடாது. அண்ணாவுக்கு பிறகு கருணாநிதி தான் முதல்வராக வேண்டுமென முன்மொழிந்தவர் எம்ஜிஆர். எம்.ஜி.ஆருக்கு புரட்சி நடிகர் […]
எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சேலம் எடப்பாடி நகராட்சியில் ரூ32.40 லட்சம் மதிப்பில் 18 குப்பை சேகரிக்கும் பேட்டரி வாகனம் வழங்கப்பட்டுள்ளது. தாதாபுரம் வழியாக புதிய வழித்தட பேருந்து துவக்கம். அறிவுத்திறனை வளர்க்கவே மாணவ, மாணவிகளுக்கு அரசு மடிக்கணினி வழங்கப்படுகிறது. இந்திய அளவில் கல்வியில் தமிழகம் முதன்மை மாநிலமாக திகழும். மத்திய அரசின் அணை பாதுகாப்பு மசோதாவிற்கு தொடர்ந்து அதிமுக எதிர்ப்பு தெரிவிக்கும். உள்ளாட்சி தேர்தல் உரிய நேரத்தில் நடைபெறும் என்று […]
கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சி ஆட்சி நடத்தி வருகிறது . இந்த நிலையில், இந்த அரசு மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 சட்ட மன்ற உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தொடர்ந்து கூறி வந்தது. ஆனால் , சபாநாயகர் நடத்தவில்லை.மேலும் கர்நாடக சட்டப்பேரவையை இன்று வரை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். இந்த […]
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சூர்யாவின் மனிதாபிமான பண்பை எண்ணி வியந்தேன், திகைத்தேன். சூர்யா போன்ற இளைஞர்களே நலிந்து வரும் தமிழ் சமூகத்தை தோள் கொடுத்து உயர்த்துவார்கள். அன்னை தெரசா போன்றவர்கள் செய்த தியாகப் பணியின் சாயல் சூர்யாவின் அகரம் பவுண்டேசனில் திகழ்வதை எண்ணி மிகவும் பரவசம் அடைந்தேன்.புதிய தேசியக் கல்விக் கொள்கைக்கு கலை உலகிலிருந்து சூர்யா தனது நியாயமான எதிர்ப்பை பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் உள்ள நட்சத்திர விடுதியில் இன்று இரவு கர்நாடக காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. நாளை சட்டமன்ற பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கும் நிலையில் கூட்டம் நடைபெறுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சிகள் இணைந்து ஆட்சியில் இருக்கிறது. இந்த நிலையில், இந்த அரசுகள் மீது நம்பிக்கை இல்லை என்று கூறி 16 உறுப்பினர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இவர்களது ராஜினாமா கடிதத்தை சபாநாயகர் ஏற்கவில்லை. மேலும், பாஜக நம்பிக்கை […]
கர்நாடகாவில் நிகழும் அரசியல் சூழல் குறித்து மத்திய அரசுக்கு அம்மாநில ஆளுநர் வஜூபாய் வாலா அறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகாவில் ஆளும் மதசார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் 16 பேர் தங்களுக்கு இந்த அரசு மேல் நம்பிக்கை இல்லை என்று கூறி தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பெரும்பான்மை குறைந்து ஆட்சி கவிழும் சூழல் உருவாகியது. இவர்களது ராஜினாமா கடிதத்தை கர்நாடக சட்டமன்ற சபாநாயகர் ரமேஷ்குமார் […]
நாடாளுமன்ற மக்களவையின் உறுப்பினரும் , மத்திய உணவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரருமான ராம் சந்திர பஸ்வான் மாரடைப்பால் காலமானார். 56 வயதான ராம் சந்திர பஸ்வான் கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் இன்று பிரிந்துள்ளது. நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி சார்பாக பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி […]
விவசாய நிலம் உட்பட எந்தஒரு இடத்திலும் உயர்மின் கோபுரம் அமைக்க மத்திய சுற்றுசூழல் துறை அனுமதி தேவையில்லை என்று மத்திய நிபுணர் மதிப்பீட்டுக் குழு முடிவு செய்துள்ளது. விளை நிலங்களில் உயர் மின் கோபுரங்கள் அமைக்க கோவை உட்பட பல இடங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனை அடுத்து ஈரோடு எம்.பி கணேசமூர்த்தி மற்றும் திருப்பூர் எம்.பி கே.சுப்புராயன் ஆகியோர் உயர் மின் கோபுரங்ள் அமைக்க மத்திய சுற்றுசூழல்துறை அமைச்சகம் அனுமதி பெற வேண்டும் என்று கூறி […]
அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் கருத்து சொல்லவும், போராட்டம் நடத்தவும் அனுமதி உள்ளது. தமிழகத்தில் இதற்கு முன்பிருந்த நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்தது அதிமுக அரசுதான். பொதுமக்கள் ஊக்கப்படுத்தினால் மட்டுமே அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முடியும். ஆண்டுதோறும் கலந்தாய்வு நடத்தி பாடவாரியாக தேர்வு செய்து பணி தரப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளராக பணியாற்றிய எஸ்.சுதாகர் ரெட்டி உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஆதலால் தற்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளராக தமிழகத்தை சேர்ந்த டி.ராஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் பாராளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவில் உற்சவத்தின் 21-வது நாளான இன்று ரோஸ் நிற பட்டாடையில் அத்திவரதர் காட்சியளிக்கிறார்.இன்று விடுமுறை தினம் என்பதால் அத்திவரதரை தரிசிக்க காஞ்சிபுரத்தில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் அத்திவரதர் தரிசனம் குறித்து தமிழக தலைமை செயலாளர் சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், அத்திவரதர் உற்சவத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரிப்பால் கூடுதலாக கூடாரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது . அத்திவரதர் உற்சவத்தில் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.ஊர்க்காவல் படையை சேர்ந்த 1,000 […]
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில் ரூ 24 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புறவழிச்சாலையை திறந்து வைத்தார் முதலமைச்சர் பழனிசாமி.மேலும் கொங்கணாபுரம் வடகரை வாய்க்கால், தொளசம்பட்டி சாலையில் ரூ.5.25 கோடியில் கட்டப்பட்டுள்ள 2 புதிய பாலங்களையும் திறந்து வைத்தார். இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில்,மக்கள் முன்வந்து நிலம் அளித்தால்தான் சிறப்பான சாலைகளை அமைக்க முடியும். கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. குடிமராமத்துப் பணிகள் விவசாயிகளின் பங்களிப்புடன் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. சேலம் உருக்காலை வளாகத்தில் […]
சென்னையில் திமுக எம் .பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழ் வளர்ச்சிக்காக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை மத்திய அரசு தெரிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.மேலும் எட்டுவழிச்சாலை, ஹைட்ரோகார்பன் உள்ளிட்ட திட்டங்களை மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. திட்டங்களை செயல்படுத்த என்ன பெயர் மாற்றினாலும், மக்களுடைய விளைநிலங்களை பறிக்க கூடிய எதையும் திமுக ஏற்று கொள்ளாது என்று தெரிவித்தார்.
திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், சமூகநீதி மூலம் கிடைத்த கல்வி உரிமையை புதிய கல்வி கொள்கை பறிக்க முயல்கிறது, இந்த கல்வி கொள்கையை திமுக எதிர்க்கும். ஆயிரமாயிரம் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் கல்வி கொள்கைக்கு எதிராக தமிழகத்தில் உள்ளவர்கள் போராடுவோம். எந்தெந்த வழிகளில் இந்தியை திணிக்க முடியுமோ அதை செய்து வருகிறார்கள் .நாம் ஒவ்வொரு நிமிடமும் எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இருக்க வேண்டும் என்று பேசினார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், நீட் விவகாரத்தில் மாணவர்களுக்கு, அரசு துரோகம் இழைக்கிறது . 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசும், ஆளுநரும் நாடகமாடுகின்றனர்.மேலும் நான் மாநிலங்களவை செல்ல வேண்டும் என்று விரும்பியே மு.க.ஸ்டாலின் சீட் கொடுத்தார். எனது மனு நிராகரிக்கப்படக் கூடும் என நினைத்து ஸ்டாலின் எவ்வளவு கவலைப்பட்டார் என்பது மட்டும் தான் தெரியும். வேட்புமனு நிராகரிப்பைத் தடுப்பதற்கு ஸ்டாலின் எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டார் என்பது எனக்கு தெரியும் என்று கூறினார்.
திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் உரையாற்றினார்.அந்த உரையில், அண்ணாவும், கருணாநிதியும் போராடிய மாநில சுயாட்சிக்கு எதிராக, ஒரே நாடு, ஒரே தேர்வு, ஒரே கல்விமுறை, ஒரே மொழி என்று உரிமைகள் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டு கூட்டாட்சிக்கு எதிரான நிலை உண்டாகும் போது ஆர்ப்பரித்து நிற்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பினார். ஆனால் ஆர்ப்பரித்து நிற்கவேண்டிய மாநில அரசு என்ன செய்கிறது? என்றும் கேள்வி எழுப்பினார் மு.க.ஸ்டாலின்.
கர்நாடக முதல்வர் குமாரசாமி பதவிக்கு சிக்கல் ஏற்பட்டு உள்ள நிலையில் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என அவரது குடும்பத்தினர் சிறப்பு பூஜை மற்றும் யாமம் நடத்தி வருகின்றனர். மேலும் எடியூரப்பா முதல்வராக வேண்டும் என பாஜக நிர்வாகிகள் மட்டுமல்லாமல் கர்நாடக அதிமுகவினரும் சிறப்பு பூஜை செய்து வருகின்றனர்.இந்நிலையில் எடியூரப்பாவின் தீவிர ஆதரவாளரும் , பாஜக எம்.பியுமான ஷோபா கரந்தலாஜே நேற்று முன்தினம் மைசூரில் உள்ள சாமுண்டீஸ்வரி மலையில் உள்ள அம்மன் கோவிலில் வெறும் காலில் 1001 படிக்கட்டு […]
தமிழக பாஜக தலைவர் தமிழிசை செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், பாதுகாப்புகளுடன் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுகிறது; இதை ஏன் அரசியலாக்குகிறார்? என்று கேள்வி எழுப்பினார் . ஹைட்ரோகார்பன் 150 ஆண்டுகளுக்கு முன் ரிலீஸ் ஆனது. இது புதிதல்ல.ஹைட்ரோகார்பன் திட்டத்தால் பாலைவனம் சோலைவனம் ஆகும். சோலைவனம் பாலைவனம் ஆகாது.ஹைட்ரோகார்பன் விவகாரத்தில் அரசியலுக்காக மக்களை ஏமாற்றுகிறார்கள் என்று தெரிவித்தார்.