காஞ்சிபுரத்தில் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த ஒரு ஏற்படும் சரிவர செய்யப்படவில்லை என்று முன்னாள் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்னன் அவர்கள் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று பேசியுள்ள நிகழ்வில் தமிழக முதல்வர் உடனடியாக அமைச்சர்களை காஞ்சிபுரத்திற்கு அனுப்பி பக்தர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். சாதாரண திருவிழா காலங்களில் செய்யும் ஏற்பாடுகள் இல்லை என்றும் மாவட்ட நிர்வாகம் கர்ப்பிணி மற்றும் முதியவர்களை கோவிலுக்கு வரவேண்டாம் என்று […]
நீட் தேர்வினால் சில மாணவர்கள் தற்கொலை செய்துக் கொண்டதால், இந்த தேர்வுக்கு எதிராக பல அரசியல் பிரபலங்கள் குரல் கொடுத்துள்ளனர். இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது பேசிய அவர்,நீட், நெக்ஸ்ட் தேர்வுகளுக்கு எதிராக இரு மசோதாக்களை நிறைவேற்றி குடியரசு தலைவருக்கு அனுப்ப வேண்டும் என்றும், நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கோவையில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், வேலூர் மக்களவை தொகுதியில், எந்த வாக்குறுதியை அளித்து திமுக மக்களிடம் வாக்கு கேட்கும் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியில் இல்லாதபோது மக்கள் அவர்களை எப்படி நம்புவார்கள் . காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க பக்தர்களுக்கு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. டிக் – டாக் செயலியை தடைசெய்வது நல்லது தான், இளைஞர்கள் உட்பட பலருக்கும் இடையூறாக உள்ள செயலியை தடைசெய்வது தவறில்லை என்று தெரிவித்தார்.
காலியாக இருக்கும் ஆளுநர் பதவிக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம் மேற்கு வங்கம், பீகார், திரிபுரா, நாகலாந்து ஆகிய 6 மாநிலங்களுக்கு புதிதாக ஆளுநர்கள் நியமிக்கபட்டுள்ளது. புதிய ஆளுநர்கள் விபரம் : மத்திய பிரதேசம் – லால் ஜி தாண்டன் உத்திரபிரதேசம் – ஆனந்தி பென் படேல் மேற்குவங்கம் – ஜகதீப் தாங்கர் பீகார் – பஹு சவுகான் திரிபுரா – ரமேஷ் பயஸ் நாகலாந்து – ஆர்.என் […]
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்ட டெல்லி முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ஷீலா தீக்ஷித் காலமானார். இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட இரங்கல் குறிப்பில், டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் காலமானார் என்ற துயரச்செய்தி கேட்டு வேதனை அடைந்தேன். 3 முறை டெல்லி முதல்வராக இருந்த ஷீலா தீக்ஷித் நிர்வாகத் திறமைமிக்கவர் என பாராட்டப்பட்டவர் .டெல்லி வளர்ச்சி, மாநில மக்களின் முன்னேற்றத்திற்காக பணியாற்றினார் என்று […]
“தமிழத்தில் மீண்டும் திமுக தலைமையிலான ஆட்சியை மலர வைப்பதே எங்கள் இலக்கு” என்று திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திமுக இளைஞர் அணி துவங்கப்பட்டு இன்றோடு 40 ஆண்டுகள் ஆகிறது. அதனையொட்டி தற்போது புதிதாக இளைஞர் அணியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி அறிக்கை ஓன்று வெளியிட்டுள்ளார். அதில் தமிழகத்தில் ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சியை மீண்டு மலர வைப்பதே இளைஞர் அணியின் இலக்கு என்று கூறியுள்ளார்.அதற்காக இரவுபகல்பாராது அனைவரும் உழைக்க வேண்டும் என்றும் […]
டெல்லியில் இன்று காலமான முன்னால் முதல்வர் ஷீலா தீக்ஷித் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். டெல்லியில் தொடந்து மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் ஷீலா தீக்ஷித். காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த இவர் இந்தியாவில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெயரும் இவர்க்கு உண்டு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டெல்லியில் போட்டியிட்ட இவர் பாஜக வேட்பாளரிடம் தோல்வியை சந்தித்தார். இந்நிலையில், இன்று அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. டெல்லி மருத்துவமனையில் சிசிச்சை பெற்று […]
மக்களிடம் அனுதாபத்தை தேடவே மேடைகளில் திமுக பொருளாளர் அழுகிறார் என்று வேலூர் தொகுதி அதிமுக வேட்பாளர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார். பணப்பட்டுவாடா புகார் காரணமாக நிறுத்தப்பட்ட வேலூர் தொகுதிக்கான தேர்தல் அடுத்த மாதம் 5 ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த நிலையில்,ஆம்பூரில் திமுக தேர்தல் பணிமனையை பொருளாளர் துரைமுருகன் நேற்று திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், எங்கள் வீட்டு தோட்டத்தில் பணம் பதுக்கியது யார் என்று எங்களுக்கு தெரியும், என் மகனை […]
உத்திரபிரதேசத்தில் உள்ள சோன்பத்ரா பகுதியில் இருபிரிவினருக்கு இடையே நடந்த சொத்து தகராறில் ஒருவரை ஒருவர் சுட்டு கொண்டனர்.இந்த சம்பவத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்தனர்.அதில் பலர் பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களை பார்க்க பிரியங்கா காந்தி நேற்று சென்றார்.ஆனால் அப்பகுதியில் 144 தடை விதிக்கப்பட்டதால் பிரியங்கா காந்தியை சோன்பத்ரா பகுதியில் தடுத்து நிறுத்தினர். இதை தொடர்ந்து பிரியங்கா காந்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.இதனால் பிரியங்கா காந்தி கைது செய்து மிர்சாபூரில் தங்கவைக்கப்பட்டார்.பாதிக்கப்பட்டவர்களை பார்த்த பிறகே மிர்சாபூரை […]
உத்திரபிரதேச மாநிலத்தில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ப்ரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். உத்திரபிரதேசம் மாநிலம் சோன்பத்ரா பகுதியில் சொத்து தகராறு காரணமாக ஒருவரை ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டனர். இந்த சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த பலர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவிக்க ப்ரியங்கா நேற்று சென்ற நிலையில் சோன்பத்ரா எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டார். […]
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,நீட் தேர்வை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளாமல் தற்போது புதிதாக தேர்வு முறையையும், தேசிய மருத்துவ கவுன்சில் அமைக்கவும் மத்திய அமைச்சரவை முடிவெடுத்திருப்பது கண்டனத்திற்குரியது. மேலும் புதுச்சேரியில் நீட் தேர்வு ரத்து செய்ய முகாந்திரம் இல்லாமல் மத்திய அரசு காலம் தாழ்த்துகிறது. தேசிய மருத்துவ கவுன்சில் அமைப்பதன் மூலம் புதுச்சேரி, தமிழகத்தில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுவர் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவைகூட்டம் கடந்த ஜூன் மாதம் 28-ம் தேதி தொடங்கி கடந்த 16 நாள்கள் தொடர்ந்து நடைபெற்றது.இந்த நாள்களில் பல்வேறு துறை சம்மந்தமான பிரச்சனைகள் குறித்தும் , மானிய கோரிக்கைகள் குறித்தும் பல விவாதங்கள் நடைபெற்றது. மேலும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110 விதியின் கீழ் பல திட்டங்களை அறிவித்தார்.இந்த சட்டப்பேரவை கூட்டத்தில் எதிர்க்கட்சி பல்வேறு கவன ஈர்ப்பு திட்டங்களை கொண்டு வந்தனர்.அதற்கு அரசு தரப்பில் இருந்து பல்வேறு விளக்கங்கள் கொடுத்தனர். இந்நிலையில் தற்போது சட்டப்பேரவை […]
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் கருவிகளில் இனி இந்தி மொழி இருக்காது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இருக்கும் அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகையை கண்காணிக்க பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. கடந்த ஜனவரி மாதம் முதல் இந்த முறையானது அனைத்து பள்ளிகளிலும் நடைமுறையில் உள்ளது.அந்த கருவிகளில் ஆங்கிலம் மொழி மட்டுமே இருந்தது. ஆனால் , சில நாட்களுக்கு முன் தருமபுரி மாவட்டத்தில் சில பள்ளிகளுக்கு கொடுக்கப்பட்ட […]
சுதந்திர தினத்தன்று தம் உரையில் இடம் பெற வேண்டிய அம்சங்கள் குறித்து பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என்று பிரதமர் மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இரண்டாவது முறையாக பெரும்பான்மையிலான எண்ணிக்கையில் பிரதமராக பதவியேற்றுள்ள மோடி ஆறாவது முறையாக டெல்லி செங்கோட்டையில் நாட்டின் கோடியை ஏற்றி வைக்கிறார். கோடி ஏற்றியதும் நாட்டு மக்களுக்கு உரை ஆற்றுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு பேச இருக்கும் நிகழ்வில் நாட்டிலுள்ள 130 கோடி மக்களின் பங்கு இருக்க வேண்டும் என்று […]
முன்னாள் முதல்வர் ஷீலா தீக்ஷித் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராவார். இவர் 1998 முதல் 2013 வரை டெல்லியின் முதல்வராக 15 ஆண்டுகள் பதவி வகித்தார். 2013-ல் ஆம் ஆத்மீ வெற்றிக்கு பின், 2014-ல் சிறிது காலம் கேரள மாநில ஆளுநராக பதவி வகித்தார். இந்நிலையில், 81 வயதாகும் ஷீலா தீக்ஷித், இருதய கோளாறு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவரது மறைவுக்கு பல அரசியல் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில்,அரசு ஊழியர்கள் பண்டிகை முன் பணம் ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும்.இதற்கான ஆணை விரைவில் வெளியிடப்படும் .ஏற்கனவே இருந்த ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் வேளச்சேரி ரயில் நிலையத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் ரூ.80 கோடியில் கட்டப்படும்.தமிழ்நாடு தொலைநோக்கு திட்டத்தின் கீழ் ரூ.4,860 கோடியில், 1.6 லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் […]
துணை முதல்வர் ஓபிஎஸ்-ன் கார் ஓட்டுநராக பணிபுரிபவர் பாஸ்கர். இவர் சென்னை சைதாப்பேட்டையில் பேட்டையில் உள்ள பொதுப்பணித்துறை உள்ள குடியிருப்பில் வசித்து வருகிறார். இவரது மகள் நிவேதிதா 12-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நிவேதிதா நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகினறனர்.
இன்று பேரவை கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறுகையில், ஆட்டுக்கு தாடியும், நாட்டுக்கு ஆளுநரும் பயனற்றது என அண்ணா குறிப்பிட்டுள்ளதாகவும், ஆளுநர் பதவி தேவையற்றது என்பதில் உறுதியாக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், பேரவை நிகழ்வை நேரடிப்பு ஒளிபரப்பு செய்வது மற்றும் 7 பேர் விடுதலை குறித்த தீர்மானத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், மத்திய அரசு இந்தி திப்பு செய்வதில்லை என்றும், தமிழை வளர்க்கும் முயற்சியில் நாங்களும் ஈடுபடுகிறோம் என்றும், இந்தி திணிப்பு என்ற கருத்துக்கு உடனடியாக வருவது சரியல்ல என்றும் கூறியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், சூட்கேஸ்கள் ஆங்கிலேயர்களின் கலாச்சாரத்தை பின்பற்றக் கூடியது என்றும், நமது கலாச்சாரத்தை பின்பற்றும் நோக்கில் தான் நிதி பட்ஜெட் சாதாரணமாக தாக்கல் செய்யப்பட்டது எனக் கூறியுள்ளார்.
பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.அப்போது அவர் கூறுகையில், வரும் காலங்களில் தண்ணீர் பற்றாக்குறை பிரச்னையை போக்க, நீர் மேலாண்மை இயக்கம், மக்கள் இயக்கமாக தொடங்கப்பட வேண்டியது அவசியமாக இருக்கிறது. ஆறுகள், முகத்துவார கழிமுகங்கள், சதுப்பு நிலங்களை மீட்டெடுத்தல் பணிகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார் .மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் குழுவை ஏற்படுத்தி செயல்படுத்தப்படும். மழை நீரை சேகரிக்க ஒரு மாதம் விழிப்புணர்வு பிரசாரம் செய்யப்படும் .கோதாவரி – காவிரியை இணைக்க, மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம் .கழிவுநீரை மறுசுழற்சி […]