தபால்துறை போட்டித் தேர்வுகள் இனி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்தப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிக்கை வெளியிட்டது.இந்த நிலையில் மத்திய அரசின் அறிக்கைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்ட அறிக்கையில், சுற்றறிக்கையை தபால் துறை உடனடியாக திரும்பப் பெற்று, அரசமைப்புச் சட்டத்தால் அங்கீகரிக்கப் பட்டிருக்கும் மொழிகளின் சமத்துவத்தைப் போற்றும் வகையில் நடந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் வேலை வாய்ப்பில்லாமல் பல இளைஞர்கள் இருக்கும் போது இந்தி மொழியில் தேர்வு என்பது […]
சென்னை தரமணியில் அம்பேத்கர் சட்டப்பல்கலை கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.இதில் முதலமைச்சர் பழனிசாமி பேசினார் .அவர் பேசுகையில், மனுநீதி சோழனை போல சிறப்பான தீர்ப்புகளை வழங்குபவர்கள் நீதிபதிகள். இந்த ஆண்டு 3 புதிய சட்டக்கல்லூரிகள் தொடங்கப்படும். தமிழகத்தில் சட்டக்கல்லூரிகளை மேம்படுத்த உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் நீதித்துறை, பத்திரிகைத்துறை சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது என்று முதலமைச்சர் பழனிசாமி பேசினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்களின் அம்மாவான அஞ்சுகத்தம்மாள் அவர்களின் நினைவிடம் கருணாநிதியின் சொந்த ஊரான திருவாரூர் மாவட்டத்தில் உள்ள காட்டூரில் உள்ளது. இந்த நினைவிடத்திற்கு இன்று திமுக தலைவர் முக.ஸ்டாலின்.அவரது மகன் உதயநிதி ஸ்டாலின், ஸ்டாலின் மனைவி, அன்பில் மகேஷ் என பலர் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தி வந்தனர்.
2009-ம் ஆண்டு நடத்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைகோ மீது தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது. தேசதுரோக வழக்கிற்காக வைகோவிற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ,ரூ 10,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு விட்டது. இந்நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேசதுரோக வழக்கில் வழங்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து உள்ளார்.அந்த மனுவில் வைகோ கூறுகையில் ,தனக்கு எதிரான தீர்ப்பு சட்ட விரோதமானது . சட்டப்படி தீர்ப்பு வழங்காமல் சிறப்பு நீதிமன்றம் […]
சென்னையில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசினார்.அப்பொழுது பேசுகையில், தேனி மக்களின் எதிர்ப்பை மீறி, வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு தன்னிச்சையாக அனுமதி வழங்கியது கண்டனத்திற்குரியது.திட்டத்தை கைவிட மத்திய அரசுக்கு முதல்வர், துணை முதல்வர் உரிய அழுத்தம் தர வேண்டும் . தமிழின் தொன்மையை சிதைக்கும் முயற்சி நடக்கிறது. நாம் போராட வேண்டிய நிலைக்கு வந்துள்ளோம்.மிகச்சரியான நேரத்தில் தமிழாற்றுப்படை நூல் […]
புதிய தலைமை செயலராக பொறுப்பேற்ற பின்னர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசினார் .அவர் கூறுகையில், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, வறுமை ஒழிப்பு உள்ளிட்டவை முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கண்காணிக்க வேண்டும் . அரசின் திட்டங்கள் சரியாக மேற்கொள்ளப்படுகிறதா என்பதை அதிகாரிகள் நேரடியாக சென்று கண்காணிக்க வேண்டும்.குடிசைவாழ் மக்களுக்கு வீடுகட்டித்தர ஆட்சியர்கள் உதவ வேண்டும். வேளாண் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை வேண்டும்.குடிமராமத்து உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் உரிய முறையில் செயல்படுத்த வேண்டும். குடிநீர் திட்டத்தை குறித்த […]
சட்டப்பேரவையில் எம்எல்ஏ தனியரசு பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்தில் நடமாடும் டாஸ்மாக் கடைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .கிராமப்புறங்களில் டாஸ்மாக் கடை இல்லாமல் மதுப்பிரியர்கள் கஷ்டப்படுகின்றனர் என்று கூறினார். மேலும் வடநாட்டில் இருந்து வந்து தமிழகத்தில் வெற்றிடம் இருக்கிறது என எட்டிப்பார்த்தனர். எட்டிப்பார்த்த வடநாட்டினரை எடப்பாடி பழனிசாமி வென்றுவிட்டார் ஏழை விவசாயி, விவசாயிகளின் செல்லப்பிள்ளை எடப்பாடி பழனிசாமி என்று எம்எல்ஏ தனியரசு பேசினார்.
இன்று சட்டசபை கூட்டம் நடைபெற்ற போது தனி தொகுதி திமுக எம்எல்ஏ பிரகாஷ் தனது தொகுதி பிரச்சனை பற்றி கூறுகையில் திடீரென தெலுங்கில் பேச தொடங்கினார். இதனால் அவை தலைவர் குறுக்கிட்டு சட்டமன்றத்தில் மொழிமாற்று கருவி இல்லை ஆதலால் தமிழில் பேச கூறினார். ஆனால் மீண்டும் தெலுங்கில் பேச அதிமுகவை சேர்ந்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் குறுக்கிட்டு முதல்வர் ஜெயலலிதாவிற்கு ஒன்பது மொழிகள் தெரியும் ஆனால் எங்களுக்கு ஏதும் தெரியாது. தெலுங்கு தெளிது, தமிழ் செப்பு என […]
தற்போது தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்து ஆடுகிற நிலையில், இதற்க்கு பல வழிகளில் தீர்வு காணப்பட்டாலும், இன்னும் முழுமையான தீர்வு கிடைத்தபாடில்லை. இந்நிலையில், அமைச்சர் வேலுமணி அவர்கள், வேலூர் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் குடிநீர் கொண்டு வரப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், ரயிலில் கொண்டு வரப்படும் குடிநீர் கீழ்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, பின்னர் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சேலம் எம்பி எஸ்.ஆர் பார்த்திபன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் எஸ்.ஆர் பார்த்திபன் திமுக சார்பில் சேலம் மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.இந்த நிலையில் எஸ்.ஆர் பார்த்திபன் மீது வனச்சரகர் அலுவலர் திருமுருகன் மேச்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், வேடன்கரடு என்ற மலைப்பகுதியில் கள தணிக்கைக்கு சென்ற வனக்காவலர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே வனக்காவலர்களை […]
கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கர்நாடகா எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்றது.இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் ,கர்நாடக எம்எல்ஏக்களின் ராஜினாமா கடிதம் மீது எந்த ஒரு முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசியல் சாசன விவகாரம் என்பதால் விரிவாக விசாரிக்க வேண்டும் என்றும் ராஜினாமா கடிதம் கொடுத்த எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செவ்வாய்க்கிழமைக்கு விசாரணையை […]
இன்று பேரவையில் முதலமைச்சர் பழனிசாமி விதி 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.அவர் வெளியிட்ட அறிவிப்பில், தூத்துக்குடியில் 60 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் . முதலீடுகளை ஈர்க்க ரூ 60 லட்சம் செலவில் “யாதும் ஊரே” என்ற தொழில் முனைவோருக்கான இணையதளம் உருவாக்கப்படும்.கோவையில் ஐ.டி. நிறுவன தேவைக்காக ரூ 200 கோடி மதிப்பீட்டில் கட்டடம் கட்டப்படும். ஏற்றுமதிக்காக காஞ்சிபுரம், ஈரோடு சிப்காட்டில் ரூ.50 கோடியில் கட்டமைப்புகள் அமைக்கப்படும். ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பூங்காக்களில் ரூ.50 கோடியில் குடியிருப்புகள் […]
உயர்நீதிமன்ற மதுரைக்கிளை விதித்த தடையை நீக்கக் கோரிய கிரண்பேடியின் வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம். புதுச்சேரியில் அம்மாநில முதல்வர் நாராயணசாமி மற்றும் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இடையே அதிகாரப்போர் நடைபெற்று வருகிறது.நாளைடைவில் இருவருக்கும்மிடையே மோதல் போக்கு அதிகரித்து வந்த வண்ணமே இருந்தது. எனவே கிரண் பேடிக்கு எதிராக புதுச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார்.அந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை,புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிட 2017ல் […]
இன்று தமிழக சட்டப்பேரவை நடைபெற்று வருகிறது.பேரவையில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார். அப்பொழுது அவர் கூறுகையில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் அலங்காநல்லூர் பேரூராட்சிகளில் வாழும் குடிசை வாழ் மக்களுக்கு, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியத்தின் மூலம் 300 சதுரடி பரப்பளவில் வீடுகளை கட்டி கொள்ள ரூ.2.10 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழகத்தில் வேலூர் தொகுதியில் மட்டும் அதிக பண பட்டுவாடா இருந்ததாக கொடுக்கப்பட்ட புகாரின் பேரில், வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தற்போது மீண்டும் ஆகஸ்ட் 5 இல் இந்த தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மீண்டும் அதிமுக சார்பில் ஏ.சி.சண்முகம் மற்றும் திமுக சார்பில் கதிர் ஆனந்த் ஆகியோர் போட்டியிட உள்ளனர். இதனை குறிப்பிட்டு, தேர்தல் நிறுத்தப்பட்டதற்கு காரணமானவர்களையே மீண்டும் பிரதான காட்சிகள் களமிறக்கி உள்ளதாகவும், அவர்களை தேர்தலில் […]
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், தமிழகத்துக்கு நீட் தேர்வு வேண்டாம் என நாங்கள் பலமுறை தெரிவித்த பின்னரும், காங்கிரஸ்தான் நீட் தேர்வை கொண்டு வந்தது என அமைச்சர் ஜெயக்குமார் பேசுவதை ஏற்றுக் கொள்ளவிலை என்பதை காட்டுகிறது. ராகுல் காந்தியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒரே மேடையில் தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்று கூறினார்கள். ஒரே கட்சி, ஒரே ஆட்சி, ஒரே கொடி, ஒரே கொள்கை, ஒரே கலாசாரம் என்ற […]
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், புதுச்சேரியில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநர் கிரண்பேடி முட்டுக்கட்டை போடுகிறார். மேலும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை புதுச்சேரியில் செயல்படுத்த விடமாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார் .ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 16-ம் தேதி புதுச்சேரியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் திமுக அமோக வெற்றிபெற்றுள்ளது.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தினகரனின் அமமுக கட்சி ஒரு இடங்களில் கூட வெற்றிபெறவில்லை. இந்த நிலையில் வேலூர் மக்களவை தொகுதிக்கு ஆகஸ்ட் 5 -ஆம் தேதி வாக்குபதிவு நடைபெறுகிறது.இது தொடர்பாக அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில் , வேலூர் மக்களவை தேர்தலில் போட்டியிட போவதில்லை என்று தெரிவித்தார். இந்த நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில் , அங்கீகாரம் பெற்ற கட்சி சின்னம் […]
பேரவையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.அப்பொழுது அவர் கூறுகையில்,தமிழகத்தில் மூடப்பட்டுள்ள 1099 கிரானைட் குவாரிகளை திறக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பாலாற்றில் அனுமதி இன்றி மணல் எடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் .சுற்றுச்சூழல் அனுமதி பெற்று மணல் எடுத்தாலும், பொதுமக்கள் எதிர்ப்பு இருந்தால் அதுகுறித்து முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என்றும் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
20 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு 29% ஊதிய உயர்வு இன்று முதல் அமல்படுத்தப்படும் என்று பேரவையில் உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக உணவுத்துறை அமைச்சர் காமராஜர் வெளியிட்ட அறிவிப்பில்,தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மற்றும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20 ஆயிரம் சுமை தூக்கும் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.இவர்களுக்கு இன்று முதல் 29% ஊதியம் உயர்த்தி வழங்கப்படும்.மேலும் ஒவ்வொரு தொழிலாளர்களுக்கும் ரூ காப்பீடு வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை அனைத்து […]