இன்றைய போட்டியில் பங்களாதேஷ் , இலங்கை மோதல் ! உலககோப்பையில் இலங்கையிடம் இதுவரை வெற்றி பெறாத பங்களாதேஷ்!

நேற்றைய போட்டியில் தென் ஆப்ரிக்கா Vs வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது . இப்போட்டி மழை காரணமாக ரத்தானது.இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.
இந்நிலையில் இன்றைய போட்டியில் பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணி மோத உள்ளது. இப்போட்டியானது , பிரிஸ்டலில் உள்ள கவுண்டி கிரவுண்ட் மைதானத்தில் நடைபெற உள்ளது.இப்போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடக்க உள்ளது.
இந்த இரு அணிகளும் இதுவரை ஒரு நாள் போட்டியில் 43 போட்டிகளில் விளையாடி உள்ளது.அதில் பங்களாதேஷ் அணி 7 போட்டிகளில் வெற்றியும் , இலங்கை அணி 36 போட்டிகளில் வெற்றியும் பெற்று உள்ளது.
இந்த இரு அணிகளும் இதுவரை உலகக்கோப்பை போட்டியில் மூன்று முறை மோதி உள்ளது.அதில் பங்களாதேஷ் அணி ஒரு போட்டிகளில் கூட வெற்றி பெறவில்லை , இலங்கை அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்றது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025