மக்களவையின் இடைக்கால சபாநாயகராக வீரேந்திர குமார் நியமனம்

மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக

மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.இந்தியாவில் 7 கட்டமாக நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்றார்.மேலும்  மத்திய அமைச்சரவை குழுவும் பதவியேற்றது. அவர்களுக்கான துறைகளும் ஒதுக்கப்பட்டன.இதனால் மக்களவைக்கு புதிதாக சபாநாயகரை தேர்வு செய்யும் பணி தீவிரமாக  நடைபெற்று வந்தது.வருகின்ற 17 ஆம் தேதி மக்களவை கூட உள்ளது.இந்நிலையில் மக்களைவையின் இடைக்கால சபாநாயகராக பாஜக எம்பி வீரேந்திரகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். புதிய எம்.பிக்களுக்கு வீரேந்திரகுமார் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.