அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ளலாம் – அதிமுக தலைமை அனுமதி

அண்மையில் அதிமுகவில் இரட்டை தலைமை கூடாது ,ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறிய அதிமுக எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பாவின் கருத்து பெறும் பரபரப்பை அக்கட்சிக்குள் ஏற்படுத்தியது. இதனால் ஒற்றைத்தலைமை குறித்து கட்சியினர் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அதிமுக தொண்டர்களுக்கு ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.அதில்,அதிமுகவின் முடிவுகள் குறித்து தொண்டர்கள் பொதுவெளியில் பேசக்கூடாது. ஒற்றை தலைமை விவகாரத்தை அடுத்து மறு அறிவிப்பு வரும் வரை அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் ஊடகங்களில் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் அதிமுக செய்தித்தொடர்பாளர்கள் வரும் 1 -ஆம் தேதி முதல் ஊடக விவாதங்களில் கலந்து கொள்ள அதிமுக தலைமை அனுமதி அளித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025