கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு-கே.எஸ்.அழகிரி

கட்சிக்கு எதிராக செயல்பட்டதால் ஒழுங்கு நடவடிக்கை அடிப்படையில் தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கராத்தே தியாகராஜன் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இன்று கராத்தே தியாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,எனக்கு மட்டும் காங்கிரஸில் நெருக்கடி தருகின்றனர் .என்னிடம் விளக்கம் கேட்காமலேயே என்னை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளார் கே.எஸ்.அழகிரி என்று கூறினார்.
இவரது கருத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், கராத்தே தியாகராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது மேலிடத்து முடிவு.நான் யாருக்கும் எதிரானவன் கிடையாது .காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் குறித்து மேலிடத்திலிருந்து விளக்கம் கேட்டார்கள். நான் விளக்கம் கொடுத்து அதன் அடிப்படையிலேயே கராத்தே தியாகராஜன் நீக்கப்பட்டார் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025