இந்திய அணியின் புதிய ஜெர்ஸியை வச்சி செய்யும் நெட்டிசன்கள் !

நடப்பு உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி ஆறு போட்டிகளில் விளையாடி ஐந்து போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்று உள்ளது. ஒரு போட்டி மட்டுமே மழையால் ரத்தானது.இதனால் புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி நாளை ஏழாவது போட்டியில் இங்கிலாந்து அணியுடன் விளையாட உள்ளது. நடப்பு உலக கோப்பை தொடரில் ஒரே நிறத்தில் ஜெர்ஸி கொண்ட இரு அணியில் விளையாடும் போது ஒரு அணி வேறு ஒரு நிறம் கொண்ட ஜெர்ஸியை பயன்படுத்த வேண்டும் என ஐசிசி அறிவித்தது.
அதன்படி இந்திய அணி நாளை புதிய ஜெர்ஸியை மாற்றி விளையாட உள்ளது.அதற்கான ஜெர்ஸியை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளது.இந்நிலையில் பிசிசிஐ வெளியிட்ட ஜெர்ஸியை மையமாக வைத்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் பயங்கரமாக மீம்ஸ் போட்டு வறுத்தெடுத்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025