உதயநிதிக்கு காத்திருக்கிறது திமுகவின் அதிகாரமிக்க பதவி!இன்று மாலை வெளியாகிறது முக்கிய அறிவிப்பு

திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார்.
திமுகவை பொருத்தவரை கருணாநிதிக்கு பின்னர் அவரது மகன் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பதவி வகித்து வருகிறார்.அவருக்கு அடுத்து திமுக தலைமை பதவி யாருக்கு கிடைக்கும் என்று கேள்விக்கு முதலில் பரிந்துரையாவது ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் தான்.
மேலும் இந்த நடைபெற்ற மக்களவை மற்றும் இடைத்தேர்தலிலும் உதயநிதி ஸ்டாலின் திமுக விற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் தீவீர தேர்தல் பிரச்சாரங்களை செய்து வந்தார்.அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி வழங்கப்படும் என்ற தகவல் அதிகம் வெளியாகி வருகிறது.
இந்த நிலையில் திமுகவின் அதிகாரமிக்க பதவிகளில் ஒன்றான இளைஞரணி செயலாளர் பதவியில் உதயநிதி ஸ்டாலின் இன்று மாலை அறிவிக்கப்பட இருக்கிறார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது திமுகவின் முன்னால் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் திமுக இளைஞரணி செயலாளர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025