17 வயது மாணவியை திருமணம் செய்வதாக கூறிய இளைஞன்!மன உளைச்சலில் ஆசிட்டை குடித்த பெண்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குளத்தூர் பகுதியில் உள்ள கள்ளர் தெருவை சேர்ந்தவர் சின்னப்பன் ஆவார்.இவரது மகன் அருண்குமார் ஆவார்.21 வயதாகிய இவர் திருப்பூரில் உள்ள தந்து மாமா வீட்டில் ஒருவருடம் தங்கி இருந்து மாமாவின் மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
அப்போது அருண்குமாருக்கும் அந்த பகுதியில் பிகாம்.சி.ஏ.படிக்கும் கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.திருமணம் செய்து கொள்வதாக கூறி அருண்குமார் அந்த பெண்ணை பல இடங்களுக்கு கூட்டி சென்றுள்ளார்.
தொடர்ந்து இவ்வாறு நடந்து வந்துள்ளது.ஒரு கட்டத்தில் மாணவி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அருண்குமாரிடம் கேட்டுள்ளார்.அதற்கு அருண்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால் மனம் உடைந்த மாணவி வீட்டில் வைத்திருந்த ஆசிட்டை எடுத்து குடித்துள்ளார்.உயிருக்கு போராடிய நிலைமையில் பெண்ணை பார்த்த குடும்பத்தினர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துசென்றுள்ளனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.இந்த சம்பவம் காரணமாக மாணவியை காதலிப்பதாக கூறி ஏமாற்றிய அருண்குமார் மீது புகார் அளித்துள்ளனர்.இதன் காரணமாக 17 வயதே மாணவிக்கு ஆவதால் அருண்குமாரை போக்சோ பிரிவின் படி கைது செய்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
“நடந்து முடிந்த குரூப் – 4 தேர்வை ரத்து செய்துவிட்டு, மறு தேர்வு நடத்த வேண்டும்” – தவெக பொதுச்செயலாளர்.!
July 17, 2025
எரிபொருள் சப்ளை ஸ்விட்சுகளை கேப்டன் ஆஃப் செய்தாரா? – இந்திய விமானிகள் சங்கம் கண்டனம்.!
July 17, 2025