அய்யோ சாமி ஆளை வுடு! பிக்பாஸ் குறித்து காட்டமான ட்வீட் செய்த பிரபல நடிகை!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 17 பேர் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியான நிலையில், 16 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, 17-வது போட்டியாளர் யார் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் பரவியது.
இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, மூணு வருஷமா கேக்குறாங்களே, இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் பாத்துட்டு வாறன் என்றும், நேத்து எபிசோட் பார்த்ததும், ஐயோ சாமி ஆளை வுடு! என்ற பீலிங் தான் வருவதாகக்கூறியுள்ளார். மேலும், மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ என பதிவிட்டுள்ளார்.
ABSOLUTELY UNBEARABLE TO WATCH ! மூணு வருஷமா கேட்குறாங்களே இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் கொஞ்சம் பார்த்துட்டு வர்றேன். ஆனா நேத்து எபிசொட் பார்த்தப்புறம் “ஐயோ சாமி ஆளை வுடு ” என்ற feeling தான் வருது. மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ? #Toxic
— Kasturi Shankar (@KasthuriShankar) July 26, 2019
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025