அய்யோ சாமி ஆளை வுடு! பிக்பாஸ் குறித்து காட்டமான ட்வீட் செய்த பிரபல நடிகை!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் துவங்கி

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியில் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 17 பேர் கலந்து கொள்வார்கள் என தகவல்கள் வெளியான நிலையில், 16 பேர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இதனையடுத்து, 17-வது போட்டியாளர் யார் என்று தொடர்ந்து ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், நடிகை கஸ்தூரி கலந்துகொள்ள இருப்பதாக தகவல்கள் பரவியது.

இதுகுறித்து அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது, மூணு வருஷமா கேக்குறாங்களே, இந்த வருஷம் போகலாம்ன்னுட்டுதான் பாத்துட்டு வாறன் என்றும், நேத்து எபிசோட் பார்த்ததும், ஐயோ சாமி ஆளை வுடு! என்ற பீலிங் தான் வருவதாகக்கூறியுள்ளார். மேலும், மாட்டிட்டு அவஸ்தைப்படுறவருக்கு பாவம் என்ன கட்டாயமோ என பதிவிட்டுள்ளார்.

unknown node