ஆன்மிக ஆக்சன் நிறைந்த கதையில் களமிறங்கும் நடிகர் விஷால்!

நடிகர் விஷால் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகராவார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இந்நிலையில் பிரபல இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி ஒருபுதிய படத்தை இயக்கவுள்ளார். இப்படமானது இந்திரா சவுந்தர்ராஜன் எழுதிய சிவம் என்ற ஆன்மிக நாவலை தழுவி எடுக்கப்படுகிறது. இந்த நாவலை படித்த சமுத்திரக்கனி, இந்த கதைக்கு நடிகர் விஷால் தான் பொருத்தமாக இருப்பார் என நினைத்து, அவரிடம் கதையை கூறியுள்ளார். நடிகர் விஷாலுக்கும் இந்த கதை பிடித்துள்ளது.
இதனையடுத்தது, இந்த கதையை திரைப்படமாக்க உரிமையை பெற்றுள்ளார் சமுத்திரக்கனி. இந்த திரைப்படம், ஆன்மிக ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025