ஆகஸ்ட் 10ம் தேதி தென்காசியை மாவட்டமாக்குவது குறித்த கருத்துகேட்பு கூட்டம்

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சட்டப்பேரவையில் பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி , தமிழக சட்டப்பேரவை விதி 110-கீழ் செங்கல்பட்டு , தென்காசி ஆகியவற்றை புதிய மாவட்டங்களாக அறிவித்தார். நெல்லையில் இருந்து தென்காசியையும் , காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டையும் பிரித்து புதிய இரண்டு மாவட்டங்களாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.
இந்த நிலையில் தென்காசி தொடர்பாக நெல்லை ஆட்சியர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அவரது அறிவிப்பில், தென்காசியை மாவட்டமாக்குவது குறித்த கருத்துகேட்பு கூட்டம் ஆகஸ்ட் 10ம் தேதி மட்டுமே நடைபெறும் என்று தெரிவித்தார். வரும் 10ம் தேதி காலை 10 மணி முதல் 11 மணி வரை நெல்லை ஆட்சியர் அலுவலகத்திலும், மாலை 3 மணிக்கு குற்றாலம் பராசக்தி கல்லூரியிலும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025