இந்திய அணி மீது தாக்குதல் நடத்த திட்டம்! வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

இந்திய அணி ,வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி 20 , 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.முதலில் நடைபெற்ற டி 20 , ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.வருகின்ற 22-ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்திய அணி வீரர்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த போவதாக தங்களுக்கு மெயில் வந்ததாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.தங்களுக்கு வந்த மெயிலை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் ஐசிசி மற்றும் பிசிசிஐ அனுப்பி உள்ளது.
இது குறித்து இந்தியகிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோரி கூறுகையில் , பயங்கரவாதிகள் மிரட்டல் உண்மை தான் இது தொடர்பாக உள்துறை அமைச்சகத்துக்குத் தெரிவித்து உள்ளோம்.ஆன்டி குவாவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது.இதை தொடர்ந்து இந்திய வீரர்களுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது என கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025