இந்திய பெண்ணை திருமணம் செய்து கொண்ட பாக். வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி!

பாகிஸ்தான் வீரர்கள் பலர் இந்திய பெண்களை குறிவைத்து திருமணம் செய்து வருகின்றனர். அதில் பாகிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர் ஷோயிப் மாலிக் ,சானியா மிர்சாவை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு அக்டோபர் 30, 2018 அன்று இஜான் மிர்சா-மாலிக் என்ற மகன் பிறந்தார். அதேபோல பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாஹிர் அப்பாஸ் மற்றும் மொசின் ஹாசன் ஆகியோரும் இந்திய பெண்களை திருமணம் செய்து உள்ளனர்.
இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் வேக பந்து வீச்சாளர் ஹசன் அலி இந்திய பெண் ஷாமியா என்பவரை திருமணம் செய்து உள்ளார்.இவர்களின் திருமண செய்தி சமீபத்தில் வெளியானது. இதை தொடந்து நேற்று துபாயில் இவர்கள் திருமணம் நடைபெற்றது.
ஹசன் அலி தனது திருமணத்திற்கு இந்திய அணி வீரர்கள் மற்றும் பாகிஸ்தான் வீரர்களை அழைப்பு விடுத்து இருந்தார்.ஆனால் இந்திய அணி வீரர்கள் யாரும் திருமணத்திற்கு செல்லவில்லை பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் மட்டுமே திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
ஹரியானாவில் உள்ள மேவாட் மாவட்டத்தை சார்ந்தவர் ஷாமியா. இவர் ஒரு தனியார் விமான நிறுவனத்தில் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025