சிதம்பரம் தலைமறைவாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவு-அமைச்சர் ஜெயக்குமார்

சிபிஐ, அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் முன்பே விளக்கம் அளித்திருக்கலாம் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், சிதம்பரம் தானாகவே சென்று சிபிஐயிடம் ஆஜராகி இருக்க வேண்டும் .வழக்கின் காரணமாக தான் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டிருக்கிறார், இதில் அரசியல் உள்நோக்கம் இல்லை.
கைது நடவடிக்கையை தவிர்த்துவிட்டு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையிடம் ப.சிதம்பரம் முன்பே விளக்கம் அளித்திருக்கலாம், அதை அவர் செய்யவில்லை.சிதம்பரம் தலைமறைவாக இருந்தது திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025