புகழேந்தி வீடியோ விவகாரம்: எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்-தினகரன் விளக்கம்

எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன் என்று புகழேந்தி விவகாரம் குறித்து தினகரன் விளக்கம் அளித்துள்ளார்.
அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் பின்னர் புகழேந்தி விளக்கம் அளித்தார்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் உள்ளவர்கள் இந்த வேலையை செய்தார்கள் என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் திருச்சியில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில்,எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்.புகழேந்தி பேசியதை திட்டமிட்டு வீடியோ எடுத்து வெளியிடவில்லை.
எல்லாவற்றையும் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும். கட்சியில் இருந்து சொந்த விருப்பத்தின் பெயரில் நிர்வாகிகள் செல்கின்றனர்.அதனை துரோகம் என்று சொல்ல மாட்டேன் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வழிநெடுக தூவப்பட்ட மலர்கள்.., சோழபுரத்தில் மோடி சாலைவலம்..! பொதுமக்கள் உற்சாக வரவேற்பு.!
July 27, 2025
மேட்டூர் அணையில் அதிகரிக்கும் நீர்வரத்து : காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடி.!
July 27, 2025
கங்கைகொண்ட சோழபுரம் புறப்பட்டார் பிரதமர் மோடி.!
July 27, 2025