நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் எதிரொலி ! சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது

மதுரையில் நீட் தேர்வு மூலம் சேர்ந்த மாணவர்களின் ஹால் டிக்கெட், கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் ஹால் டிக்கெட், கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் மாணவர் சேர்ந்தார்.இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது.
எனவே மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட்தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் சான்றிதழ்கள் நாளை முதல் (அதாவது இன்று முதல் )சரிபார்க்கப்படும் என்று மதுரை அரசு மருத்துவக் கல்லூரி டீன் வனிதா தெரிவித்தார்.
இதனையடுத்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் நீட் தேர்வு மூலம் சேர்ந்த 250 மாணவர்களின் ஹால் டிக்கெட், கல்விச் சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தொடங்கியது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஈரான் கொடுத்த கொலை மிரட்டல்? டிரம்ப் சொன்ன பதில்!
July 10, 2025