ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார்- அமைச்சர் ஜெயக்குமார்

ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.அவர் கூறுகையில், மாமல்லபுரத்தில் நடைபெற உள்ள பிரதமர் மோடி- சீன அதிபர் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வருகை தரும் அவர்களை வரவேற்பது என்பது தமிழர் பண்பாடு ஆகும்.நீதிமன்றம் உத்தரவின் அடிப்படையில் பேனர் வைக்கப்படும் என்று கூறினார்.
மேலும் ராதாபுரம் தொகுதியை பொறுத்தவரை எந்த தவறும் நடைபெறவில்லை. அந்த வகையில் தான் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். கண்டிப்பாக தர்மம், நியாயம் வெற்றி பெறும் என்ற அடிப்படையில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று தெரிவித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025