ஒரு நிமிடத்தில் நடந்த வங்கி கொள்ளை.. ஹெல்மெட் நபர்கள் வெறிச்செயல்..!

பீகார் மாநிலம் முசாபர்பூர் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார்
வங்கிக்குள் நுழைந்து ஆறு கொள்ளையர்கள் வந்த வேகத்தில் 8 லட்ச ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
நேற்று வங்கியின் பணிகள் வழக்கம் போல் நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது தலையில் தலைக்கவசம் அணிந்த படி வங்கிக்குள் நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல், அதி விரைவாக செயல்பட்டு, கவுண்டரில் இருந்து எட்டு லட்ச ரூபாய் பணத்தை அசால்டாக கொள்ளையடித்து சென்றனர்.
உள்ளே வந்த உடனே, அவர்கள் அங்கிருந்த வாடிக்கையாளர்களையும் வங்கி ஊழியர்களும் கட்டுப்படுத்தினர். மேலும் நுழையும் முன்னே, அங்குள்ள காவலாளிகளின் துப்பாக்கியை பிடுங்கி வைத்துள்ளனர்.
இது தொடர்பாக காவல்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த பதிவினை வைத்து இந்தத் 6 திருடர்கள் யார் என தனிப்படை அமைத்து கண்டுபிடித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025