பயிற்சி விமானம் கீழே விழுந்ததில் உயிரிழந்த இரண்டு விமானிகள்..!

தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் இரண்டு விமானிகளை கொண்ட பயிற்சி விமானம் ஒன்று, இன்று மதியம் புறப்பட்டது. இந்த விமானம் விகராபாத் மாவட்டத்தில் உள்ள பாந்த்வரம் மந்தல் பகுதியில் பறந்து கொண்டிருந்தது. அப்பொழுது அங்குள்ள பருத்தி தோட்டத்தின் மேலே பறந்து கொண்டிருந்த விமானமானது, கட்டுப்பாட்டை இழந்து நடு வானில் சுழன்று கொண்டே அங்கிருந்த பருத்தி தோட்டத்தில் விழுந்து நொறுங்கியது.
உடனே அங்கிருந்த விவசாயிகள், விமானத்திற்கு அருகே சென்று, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அந்த இரண்டு பயிற்சி விமானிகள் மீட்டனர். அவர்கள் உயிரிழந்தார்கள் என ஊறுதிசெய்தனர். மேலும், விமானம் எப்படி விழுந்தது? போன்ற கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs KKR : மாஸ் பவுலிங்.., விக்கெட்டுகளை அள்ளிய நூர் அகமது.! சென்னைக்கு இது தான் இலக்கு.!
May 7, 2025
”அசோக வனத்திற்கு செல்லும்போது அனுமன் பின்பற்றிய கொள்கையே ஆபரேஷன் சிந்தூர்” – ராஜ்நாத் சிங்.!
May 7, 2025