ஏழாம் வகுப்பு படிக்கும் மாணவியின் நேர்மையாக ஜெர்மனியில் இருந்து குவிந்த பரிசு பொருள்கள்..!

சமீபத்தில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவக்கோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியி்ல் ஏழாம் வகுப்பு படிக்கும் வரும் மாணவி மகாலெட்சுமி. இவர் தனது பள்ளி வளாகத்தில் கிடந்த பணத்தை நேர்மை தவறாமல் தனது வகுப்பு ஆசிரியரிடம் கொடுத்தார்.இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இதை அறிந்த யோகானந்தன் புத்ரா என்பவர் மாணவியின் நேர்மைகாக ஜெர்மனியில் இருந்து 70-திற்கும் மேற்பட்ட பென்சில் 30-திற்கும் மேற்பட்ட பேனாக்கள் மற்றும் கலர் பென்சில்கள் என 17 வகையான பரிசுப் பொருள்களை தபால் மூலம் சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளிக்கு அனுப்பி வைத்தார்.
இந்த பரிசுப் பொருள்களை அனைத்தையும் தேவகோட்டையில் உள்ள ஸ்ரீ சேவுகன் அண்ணாமலை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சிந்தாமணி வஸ்தி ராணி மாணவி மகாலெட்சுமிக்கு கொடுத்து கௌரவபடுத்தினார்.