தரவரிசை பட்டியலில் இந்திய அணி வீரர்கள் முன்னேற்றம்..!கோலிக்கு இன்னும் ஒரு புள்ளிதான்..!

ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த ஒரு வருடமாக முதல் இருந்தார். தடைக்குப் பின் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித் அதிரடியாக விளையாடி 937புள்ளிகள் பெற்று முதல் இடத்தை பிடித்தார்.
இதனால் இந்திய அணி கேப்டன் கோலி 899 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இந்நிலையில் புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி ஆட்டமிழக்காமல் 254 ரன்கள் எடுத்தால் ஐசிசி தரவரிசையில் 37 புள்ளிகள் பெற்று. புள்ளி பட்டியலில் 936 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
பந்து வீச்சாளர் தரவரிசை பட்டியலில் முதல் 10 இடத்தில் இந்திய அணி வீரர்கள் இரண்டு பேர் இடம் பெற்று உள்ளனர். தமிழக வீரர் அஸ்வின் புனேவில் நடைபெற்ற 2-வது டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட்கள் வீழ்த்தியதன் மூலம்7-வது இடம் பிடித்துள்ளார். பும்ரா 3-வது இடம் பெற்றுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
விடிய விடிய வெடிகுண்டு சத்தம்! தட்டி தூக்கும் இந்திய ராணுவம்.., எல்லையில் தொடரும் பதற்றம்!
May 9, 2025
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025