நிர்வாணமாக திருட வந்த திருடன்..!அச்சத்தில் மக்கள்..!

விருத்தாச்சலத்தில் பி.என்.ஆர் நகரிலுள்ள ஜமால் பாஷா தெருவில் வீடுகளின் ஜன்னலில் வைக்கும் பொருட்கள் அடிக்கடி காணாமல் போகி உள்ளது. பொருள்கள் எப்படி காணாமல் போகிறது என தெரியாமல் அந்த தெருவில் இருந்தவர்கள்குழப்பத்தில் இருந்தனர்.
இந்நிலையில் அங்கு செல்போன் , நகைகள் சின்ன சின்ன பொருட்களை தொடர்ந்து காணாமல் போனது. அந்த தெருவில் வசிக்கும் ரம்ஜான் அலி என்பவர் வீட்டில் திங்கள்கிழமை அதிகாலை ஏதோ சத்தம் கேட்கிறது என எழுந்தார்.
அப்போது யாரோ திருட முயற்சி செய்கிறார் என தெரிந்தது.அவர்கள் வெளியே வந்து பார்த்தபோது சுவரில் ஏறி யாரோ ஒருவர் ஓடுவது போல தெரிந்தது.பின்னர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமராவை பார்த்த போது அதில் ஒருவர் நிர்வாணமாக கையில் பிளாஸ்டிக் பையுடன் வருவது பதிவாகியிருந்தது.
ரம்ஜான் அலி குடும்பத்தினர் தூக்கம் கலைந்து பார்த்ததை அறிந்த அந்த திருடன் சுவர் ஏறி குதித்து ஓடும் காட்சியும் பதிவாகி உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025