மீண்டும் நெல்லையில் கால்பதிக்க உள்ள நடிப்பு அசுரன் தனுஷ்!

தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் அசுரன். இந்த படம் ரசிகர்கள் மத்தியிலும், விமர்சகர்கள் மத்தியிலும் பலத்த வரவேற்ப்பை பெற்று வருகிறது. இப்படத்தை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் தனுஷ் நடித்து வருகிறார்.
இந்த படத்தின் ஷூட்டிங்கை முடித்துவிட்டு தனுஷ், பரியேறும் பெருமாள் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் ஒரு புதிய படம், செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படம் என இரு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க உள்ளார்
இந்த இரு படங்களுமே நெல்லையை மையப்படுத்திதான் எடுக்கப்பட உள்ளதாம். இதனால், இரு பட ஷூட்டிங்கும் ஒரே நேரத்தில் நடைபெற உள்ளதாம். இந்த இரு படங்களையும் கலைப்புலி எஸ்.தாணு தான் தயாரிக்க உள்ளாராம்.
ஏற்கனவே வெளியான அசுரன் திரைப்படம் நெல்லை மாவட்டம் கோவில்பட்டியை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.