பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் : நடிகர் விவேக்

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுபட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்து 2 வயது சிறுவன் சுஜீத் மீட்க தாமதமானதால் இறந்துவிட்டான். சிறுவனின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து விட்டு வருகின்றனர்.
குழந்தை சுஜித்தின் மரண எதிரொலியாக, அணைத்து இடங்களிலும் உள்ள ஆழ்துளை கிணறுகளை மூடுமாறு கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகர் விவேக், சுஜித் மரணத்திற்கு பிறகாவது பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.