கடந்த 7 வருடங்களாக பந்து வீசாத ரோஹித்..! தரவரிசையில் ஹர்திக் பாண்டியாவை விட முன்னிலை ..!

இந்திய அணி , பங்களாதேஷ் அணியுடன் சமீபத்தில் டி20ஐ போட்டியில் விளையாடியது . இப்போட்டியில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.இந்நிலையில் ஐசிசி டி20 ஐ ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
அதில் இந்தியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 48-வது இடம் பிடித்து உள்ளார். ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவை விட ரோஹித் சர்மா 10 இடங்கள் முன்னிலையில் உள்ளார். ஹர்திக் பாண்டியா 58 வது இடத்தில் உள்ளார்.
கடந்த ஏழு ஆண்டுகளில் டி20 ஐ கிரிக்கெட்டில் ரோஹித் ஒரு பந்து கூட வீசவில்லை . கேப்டன்களில் கடைசியாக டி20ஐ போட்டியில் பந்து வீசிய வீரர் விராட் கோலி.
விராட் கோலி 2016-ம் ஆண்டு பந்து வீசினார். விராட் கோலி ரோஹித் மற்றும் ஹர்திக் பாண்டியாவை விட முன்னிலையில் உள்ளார். விராட் கோலி ஆல்-ரவுண்டர் தரவரிசை பட்டியலில் 22-வது இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
4-வது டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து அணி நிதான தொடக்கம்.., 2 விக்கெட் இழப்புக்கு 225 ரன்கள் குவிப்பு.!
July 25, 2025
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான வில்சன், கமல்ஹாசன் உள்ளிட்டோர் இன்று பதவியேற்பு.!
July 25, 2025
வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி….நாளை இந்த மாவட்டங்களில் மழைக்கு வைப்பு!
July 24, 2025
‘மாரீசன்’ படம் எப்படி இருக்கு? டிவிட்டர் விமர்சனம் இதோ!
July 24, 2025