கமல் அரசியலில் நிச்சயம் விஸ்வரூபம் எடுப்பார்! தளபதி விஜயின் தந்தை அதிரடி!

நடிகர் கமலஹாசநின் 60 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் வகையில் நேரு உள்விளையாட்டு அரங்கில், பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தளபதி விஜயின் தந்தையும் கலந்து கொண்டார்.
அப்போது நடிகர் கமலஹாசன் குறித்து, தளபதி விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவர்கள் பேசுகையில், கமலஹாசன் அக்குறித்து பல விடயங்களை பகிர்ந்து கொண்டார். மேலும், அவரது அரசியல் குறித்து பேசுகையில், சினிமாவில் இருப்பவர்கள் வரக்கூடாது என பலரும் பேசி வருகின்றனர்.
எல்லா துறையிலும் உள்ளவர்கள் அரசியலுக்கு வரும் போது, சினிமாக்காரர்கள் மட்டும் ஏன் வரக்கூடாது? என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமல் நிச்சயம் அரசியலில் விஸ்வரூபம் எடுப்பார். கமல் மற்றும் ரஜினி என இரண்டு ஜாம்பவான்கள் இணைந்தால், தமிழ்நாட்டுக்கும், தமிழர்களுக்கும் நல்லது என பேசியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!
May 15, 2025
இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!
May 15, 2025