1,000 ரூபாய் ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு – திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி பொங்கல் பரிசு தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார்.
சென்னையில் நடைபெற்ற விழாவில் முதற்கட்டமாக 5 குடும்பங்களுக்கு பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூ.1000 வழங்கினார் முதலமைச்சர் பழனிசாமி. இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் தமிழக முதலமைச்சர் பழனிசாமி அரிசி ரேஷன் அட்டை வைத்துள்ளவர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 வழங்கப்படும் என்று தெரிவித்தார்.இதனுடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.அதில், 1 கிலோ பச்சரிசி,1 கிலோ சர்க்கரை,2 அடி துண்டு கரும்பு,20 கிராம் முந்திரி,20 கிராம் உலர் திராட்சை,5 கிராம் ஏலக்காய் உள்ளிட்ட பொருட்களும் இடம்பெறும் என்று தெரிவித்தார்.பின்னர் ரூ.1000 பொங்கல் பரிசு தர ரூ.2,363 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.இந்த பரிசு தொகுப்பு அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மட்டுமே. சர்க்கரை மற்றும் இதர கார்டுதாரர்களுக்கு பரிசுத்தொகுப்பு கிடைக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
“இவ்வளவு அசிங்கப்பட்டுமா அந்தக் கூட்டணியில் தொடரணுமா?” விசிக, கம்யூ. கட்சிகளுக்கு இபிஎஸ் அழைப்பு.!
July 16, 2025
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! “சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்” – நெதன்யாகு எச்சரிக்கை.!
July 16, 2025
நாளை (ஜூலை 17) திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
July 16, 2025