டுவிட்டரில் உலளவில் #CoolestPM ட்ரண்டாகும் ஹெஷ்டாக்

Default Image
  • தன்னை கலாய்த்த நபர்க்கு மிகவும் கூலாக பதிலளித்த மோடி 
  • உலளவில் டுவிட்டரில்  ட்ராண்டாகும்  #CoolestPM ஹஷ்டாக் முதலிடம்

தமிழகத்தில் இன்று  பல மாவட்டங்களில் சூரிய கிரகணம் தெரிந்தது.இது வளைய சூரிய கிரகணம் என்று கூறுகின்றனர்.அவ்வாறு காலை 8 மணிக்கு தொடங்கிய சூரிய கிரகணம் ஊட்டி, மதுரை,  திண்டுக்கல் உள்ளிட்ட பல இடங்களில் நன்றாக தெரிந்தது. சந்திரன்  சூரியனை மெல்ல மெல்ல மறைத்துக் கொண்டே வந்து நெருப்பு வளைய சூரிய கிரகணம் முழுமையாக தெரிந்தது. இந்த அபூர்வ நிகழ்வை தமிழகத்தின் பல இடங்களில் மக்கள் சூரிய கண்ணாடியின் உதவி கொண்டு பார்த்து  ரசித்தனர்.

இவ்வாறு சூரிய கிரகணத்தை நாடு முழுவதும் பெரிதாக பேசிக் கொண்டும் ரசித்து கொண்டும் இருந்த வேளையில் பிரதமர் நரேந்திர மோடி சூரிய கிரணம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்  நாட்டு மக்களை  போலவே  நானும் இந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க ஆவலாகவே இருந்தேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாக தலைநகர் டெல்லியில் மேகமூட்டத்தால் கிரகணத்தை சோலார் கண்ணாடிகளின் வழியாக பார்க்க முடியவில்லை. மேலும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க  முடியாத‌து மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.ஆனால் இந்தியாவின் பிற பகுதிகள் மற்றும் கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதிகளில் தெரிந்த நெருப்பு வளைய சூரிய கிரகணத்தை நேரடி ஒளிப்பரப்புகளின்  மூலம் கண்டு ரசித்தேன். கிரகணம் தொடர்பாக நிபுணர்களுடன் கலந்து உரையாடி சூரிய கிரகணம் குறித்த தனது அறிவை வளப்படுத்தினேன். மேலும் வானியல் நிபுணர்களிடம் எனக்கு தெரிந்த தகவல்கள் பற்றியும் சற்று விவாதித்தேன் என்று  மோடி ட்விட் செய்தார்.

இந்நிலையில் மேக மூட்டத்தின் விளைவாக தன்னால் முழு வளைய சூரிய கிரகணத்தை பார்க்க முடியவில்லை என்று  வருத்தம் தெரிவித்து பதிவிட்ட மோடியின் புகைப்படங்கள் மீம்ஸ்களாக ஆக போவதாக டுவிட்டரில் ஒருவர் பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரீட்விட்  செய்த பிரதமர் மோடி இதனை  மிகவும் வரவேற்கிறேன், மகிழ்ச்சியாக இருங்கள்  என குறிப்பிட்டுள்ளார்.

Image

பிரதமர் மோடி தன்னை மீம்ஸ்கள் மூலம் கிண்டல் செய்ய போவதாக தெரிவித்த ட்விட்டை      ரீ-ட்விட் செய்து  அதனை மிகவும் வரவேற்கிறேன் என்ற மோடியின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.இதனால் சமூகதளவாசிகள் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பதிவிட்டு #CoolestPM என்ற ஹஷ்டாகை உருவாக்கி அதில் பதிவிட்டு வருகின்றன.  #CoolestPM  ஹஷ்டாக்  தற்போது உலகளவில் முதலிடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Harry Brook and Jamie Smith partnership
student -10th mark
tvk manimaran
Harry Brook - Jamie Smith
vijay - chennai hc
Dog Bite Rabies