விண்ணில் பாய்ந்தது தர்பார் விமானம்! களைகட்டும் ப்ரோமோஷன்!

- சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த வாரம் வெளியாக உள்ள திரைப்படம் தர்பார்.
- இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழு தற்போது பட தயாரிப்பு நிறுவனம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படம்அடுத்த வரம் ஜனவரி 9ஆம் தேதி வெளியாக உள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது.
அடுத்த வாரம் இப்படத்தை வெளியிட உள்ளதால் படக்குழு தற்போதிருந்தே ப்ரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. பட விளம்பரங்கள், போஸ்டர்கள் ஆகியவற்றை தொடர்ந்து படக்குழு தர்பார் போஸ்டரை விமானத்தில் ஒட்டியுள்ளது.
இந்த விமானங்கள் நேற்று முதல் விண்ணில் சென்றன. இதே போல விமான ப்ரோமோஷன் ரஜினியின் கபாலி பட ரிலீஸ் சமயத்தில் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
???????????? pic.twitter.com/8qRFz6paVm
— Anirudh Ravichander (@anirudhofficial) January 2, 2020
லேட்டஸ்ட் செய்திகள்
சிறுவன் கடத்தல் வழக்கு : பூவை ஜெகன்மூர்த்தி தலைமறைவு!
June 28, 2025