யார் யார் தலைமையில் அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன! உயர்நீதிமன்ற கிளை உத்தரவு!

- பொங்கல் தினத்தை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தற்போது அலங்காநல்லூர், அவனியாபுரம், பாலமேடு பகுதிகளில் ஏற்பாடு தீவிரம் அடைந்துள்ளது.
- இது குறித்து மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தற்போது புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பொங்கல் தினம் நெருங்கும் வேளையில் இந்த பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் வருடந்தோறும் நடைபெற்று வருகிறது. அதேபோல இந்தாண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற ஏற்பாடு தீவிரமடைந்துவரும் வேளையில், மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இதுகுறித்து வழக்கு போடப்பட்டிருந்தது.
அந்த வழக்கு விசாரணையில், தனி ஒருவர் தலைமையில் கமிட்டி மூலம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுவதால், அனைத்து தரப்பினரும்முக்கிய முடிவுகளில் பங்கேற்க முடியவில்லை என புகார் அளிக்ப்பட்டிருந்தது.
அந்த வழக்கில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியானது, ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி மாணிக்கம் தலைமையிலும், அலங்காநல்லூர், பாலமேடு பகுதிகளில் ஆட்சியர், தென்மண்டல ஐஜி, ஊராட்சி உதவி இயக்குனர் ஆகியோர் தலைமையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தவேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025