ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து

- பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.
- தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படுகிறது.இதற்காக மக்கள் அனைவரும் தமிழர் திருநாளான பொங்கலை கொண்டாட தயாராகி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் கூறுகையில்,பொங்கல் திருநாள் அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சி, செழிப்பை அள்ளித்தர வாழ்த்துகிறேன். கொண்டாட்டம், சமத்துவம், சகோரத்துவம் ஆகியவற்றை உள்ளடக்கியதாக பொங்கல் திருநாள் அமையட்டும். நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக தை திருநாளில் இயற்க்கைக்கு பிரார்த்தனை செய்து , நன்றி செலுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!
May 9, 2025
” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!
May 9, 2025