நடக்கிறது தரங்கெட்ட ஆட்சி.! எடுத்துக்காட்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேடு.! திமுக இளைஞரணி செயலாளர் கடும் விமர்சனம்.!

Default Image
  • தமிழகத்தில் டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என திமுக கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையைச் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய அவர்,  தரங்கெட்ட ஆட்சி நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேடு என கடுமையாக விமர்சித்தார்.

தமிழகத்தில் குரூப்-4 தேர்வில் முறைகேடு நடந்ததாக தேர்வர்கள் கொடுத்த புகாரின் பேரில் டி.என்.பி.எஸ்.சி. விசாரணை நடத்தியது. அந்த விசாரணையில் குருப்-4 தேர்வில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது. அதில் சம்பந்தப்பட்ட 99 தேர்வர்களை தகுதி நீக்கம் செய்து வாழ்நாள் முழுதும் தேர்வு எழுத டி.என்.பி.எஸ்.சி. தடை விதித்தது. பின்னர் குரூப் 4 தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் சிபிசிஐடி போலீசார் 3 தனிப்படைக்கள் அமைத்து விசாரணை செய்ததில் இடைத்தரகர், தேர்வர்கள் என 16 பேரை கைது செய்தனர். மேலும் இதுதொடர்ந்து சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடுகள் நடந்திருப்பது இப்போது உறுதியாகியுள்ளது.

இதனிடையே டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடுகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என ஏற்கனவே திமுக கோரிக்கை வைத்துள்ளது. இந்தக் கோரிக்கையைச் சென்னையில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகம் முன்பாக திமுக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பேசிய அவர்,  தரங்கெட்ட ஆட்சி நடைபெறுவதற்கு எடுத்துக்காட்டு டி.என்.பி.எஸ்.சி முறைகேடு என கடுமையாக விமர்சித்தார். இதைத்தொடர்ந்து டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு வழக்கை சிபிஐ விசாரணை மாற்றவில்லை என்றால், வேறுவிதமான போராட்டங்கள் நடத்தப்படும் என அவர் எச்சரித்தார். இந்த போராட்டத்தில், திமுக இளைஞரணியினர், மாணவரணியினர் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

vijay - chennai hc
Dog Bite Rabies
Nikitha
TVK Vijay
TamilagaVettriKazhagam
TVK - meeting