வருமான வரித்துறை அலுவலகத்தில் அன்புசெழியன் ஆஜர்

சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆஜராகியுள்ளார்.
நடிகர் விஜய் மற்றும் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஏ.ஜி.எஸ்க்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.நடிகர் விஜய் வீட்டிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. விஜய் வீட்டில் ரொக்கம் எதும் கைப்பற்றவில்லை.ஆனால் பைனான்சியர் அன்புசெழியனுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் ரூ.77 கோடி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் ரூ.300 கோடி வரி ஏய்ப்பு செய்ததாக வருமானவரித்துறையால் தெரிவிக்கப்பட்டது
எனவே வருமான வரித்துறை அதிகாரிகள், ஆவணங்கள் குறித்து விசாரிப்பதற்காக நடிகர் விஜய், ஏ.ஜி.எஸ். நிறுவனத்தின் அர்ச்சனா கல்பாத்தி , சினிமா பைனான்சியர் அன்புசெழியன் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.இதனால் விஜய் சார்பாக அவரது ஆடிட்டரும், ஏ.ஜி.எஸ். நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தியும் வருமானவரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தனர். இந்நிலையில் இன்று சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் சினிமா பைனான்சியர் அன்புசெழியன் ஆஜராகியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025