பேராசிரியர் க.அன்பழகனின் மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல்!

தி.மு.க. பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் (97) உடல் நலக்குறைவால் இன்று காலமானார்.அவருடைய மறைவிற்கு நடிகர் கமல் ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுச்செயலாளர் மறைவினை அடுத்து திமுக நிகழ்ச்சிகள் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதுடன் அனைத்தும் ஒத்திவைக்கப்படுகிறது என்றும் கட்சிக்கொடி தொடர்ந்து 7 நாட்கள் அரை கம்பத்தில் பறக்கும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை மூலமாக அறிவித்துள்ளார்.
மேலும் மறைந்த திமுக பொதுச்செயலாளர் க அன்பழகனின் உடலுக்கு மு.க ஸ்டாலின் மற்றும் அக்கட்சியின் தொண்டர்கள் அஞ்சலி செலுத்திய நிலையில் பலரும் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் மறைந்த திமுக பொதுச்செயலாளர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
வெடித்தது இந்தியா-பாக் போர்.., பஞ்சாப், ராஜஸ்தான், ஜம்மு-காஷ்மீர் பள்ளி, கல்லூரிகள் மூடல்.!
May 9, 2025
ட்ரோன் அட்டாக் எதிரொலி: இருளில் மூழ்கிய மைதானம்.., பஞ்சாப் – டெல்லி போட்டி பாதியிலேயே நிறுத்தம்.!
May 8, 2025