சினிமாவில் எல்லா துறையிலும் கால் பதிக்க வேண்டும் அனுஷ்கா ஷர்மாவின் அதிரடி முடிவு

Default Image

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா ஷர்மா. இவர்  விராட் கோலியை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிலையில், தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தற்போது அனுஷ்கா சர்மா திரையுலகில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

இவர் பரி என்ற இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இது குறித்து உங்கள் பிடித்த கேரக்டர் கிடைக்கவில்லை என்பதால் தான் நீங்களே படம் தயாரிக்கிறீர்களா? என்று பல கேள்விகள் எழுந்த நிலையில், இதனை அனுஷ்கா சர்மா மறுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் படங்களில் நடிப்பதை குறைத்து விட்டு, சினிமாவில் எல்லா துறையிலும் கால் பதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தின் காரணமாக தற்போது நான் படத்தை தயாரிக்கிறேன். அவ்வளவுதான் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

eps - mk stalin
DMK - Ajithkumar
Ajith Kumar TN Govt
elon musk vs Trump
Ajith Kumar Case - Siva Gangai