7,8 மற்றும் 9 வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து..!

உலகம் முகழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தலை தூக்கியுள்ளது இதுவரை இந்தியாவில் மட்டும் 2வர் உயிரிழந்துள்ளனர்.84பேர் பாதிக்கப்பட்டுள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்நிலையில் உயிரிழந்த இருவரில் ஒருவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் என்பதாலும் அம்மாநிலத்தில் கொரோனா பரவுவதை தடுக்கும் விதமாகவும் மக்களிடையே கொரோனா அச்சம் காரணமாகவும் கர்நாடகாவில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான மால், தியேட்டர்கள் ஒரு வாரத்திற்கு மூட அம்மாநில முதல்வர் எடியூரப்பா உத்தரவு விட்டார்,மேலும் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை மட்டுமல்லாமல் திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள், மதுபான விடுதிகளை மூடவும் அரசு உத்தரவு விட்டுள்ளது. இதனால் மக்கள் அதிகம் கூடுகின்ற எந்த ஒரு நிகழ்ச்சிகளுக்கும் அடுத்த 1 வாரத்திற்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்த நிலையில் தற்போது அம்மாநிலத்தில் 7,8 மற்றும் 9 ம் வகுப்பு முழு ஆண்டுத் தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. உயிர்கொல்லி கொரோனா வைரஸ் தொற்றின் அச்சுறுத்தலை அடுத்து மார்ச் 31 வரை தேர்வுகளை ஒத்திவைத்து கர்நாடக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025
“காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளன, உங்களுக்கு ஏன் அவசரம்?” – தவெகவுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.!
July 4, 2025
”நாய் கடித்து தாமதமாக சிகிச்சைக்கு வந்தால் உயிருக்கு ஆபத்து”- தமிழ்நாடு சுகாதாரத்துறை எச்சரிக்கை!
July 4, 2025