தனது சொந்த தொகுதியில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது? – பிரதமர் மோடி கேட்டறிந்தார்.!

உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எப்படி நடக்கிறது என அப்பகுதி பாஜக நிர்வாகியிடம் தொலைபேசியில் கேட்டறிந்துள்ளார் பிரதமர் மோடி.
வாரணாசி பகுதி பாஜக நிர்வாகி ஹன்ஸ்ராஜ் விஸ்வகர்மாவிடம், பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடியுள்ளார். அப்போது, வாரணாசியில் பொதுமக்களுக்கு விநியோகிக்க அதிகப்படியான முகக்கவசங்களை பாஜகவினர் தயார் செய்துவருவதாக, பாஜக நிர்வாகி குறிப்பிட்டுள்ளார். இந்த முகக்கவசங்களை முதலில் மருத்துவர்களுக்கும், மருத்துவ ஊழியர்கள், சுகாதார பணியாளர்களுக்கு கொடுங்கள்.
முகக்கவசங்கள் தயாரிப்பதில் நேரத்தையும், பணத்தையும் செலவழிக்காமல் கைக்குட்டை, துண்டு போன்றவரையும் பயன்படுத்தலாம் என பிரதமர் மோடி வாரணாசி பாஜக நிர்வாகியிடம் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025