புதுச்சேரியில் கொரோனாவால் முதல் உயிரிழப்பு.!

புதுச்சேரி மாஹேவில் கொரோனா பாதிக்கப்பட்ட 71 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால் பாதிப்பும், உயிரிழப்பும் தினந்தோறும் உயர்ந்துகொண்டே செல்கிறது. இதனால் மத்திய, மாநில அரசு பல்வேறு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவிலும் கொரோனாவால் இதுவரை 7447 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், 239 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். மேலும் வைரஸிலிருந்து 643 பேர் குணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் மட்டும் 1574 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டு 110 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் தினந்தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்புகளும் அதிகரித்து வண்ணம் உள்ளது. அதுபோல தமிழகத்தில் கொரோனா வைரசால் 911 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த 44 பேர் குணமடைந்துள்ளார்கள். அந்த வகையில் புதுச்சேரியில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. மாஹேவில் கொரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 71 வயது முதியவர் ஒருவர் சிகிச்சை பலனின்றி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இதனிடையே புதுச்சேரியில் 8 பேர் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, அதில் ஒருவர் குணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
இந்திய பவுலர்களுக்கு சவாலாக மாறிய இங்கிலாந்து பார்ட்னர்ஷிப்.! சதம் விளாசிய ஸ்மித் – ஹாரி புரூக்.!
July 4, 2025
மறுக்கூட்டலில் இன்ப அதிர்ச்சி..,10ம் வகுப்பு பொதுத்தேர்வில் 499 மதிப்பெண்கள் பெற்று பொள்ளாச்சி மாணவன் அசத்தல்.!
July 4, 2025
5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இங்கிலாந்து.., ஹாரி புரூக் அரைசதம் – ஸ்மீத் அதிரடி சதம்.!
July 4, 2025