உலகின் மிகச்சிறிய பெண் மூலம் போலீசார் கொரோனா விழிப்புணர்வு!

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவிவரும் நிலையில், அதிகமாக உள்ள நாடுகளில் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், பலர் காவலர்கள் மற்றும் அரசின் உத்தரவை மீறி வெளியே நடக்கிறார்கள். இதனால் போலீசார் பல முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.
தற்போது மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாக்பூரில் உலகின் மிக சிறிய பெண்ணாகிய ஜோதி அம்ஜ் மூலம் விழிப்புணர்வு கொடுக்கப்பட்டுள்ளது. போலிஸாரின் காரில் ஏறி நின்ற ஜோதி கொரோனா குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு கொடுத்துள்ளார்.