நாம் பேசும் விதத்தில் தான் நாம் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்!

Default Image

நாம் பேசும் விதத்தில் தான் நாம் யார் என்பதை மற்றவர்கள் புரிந்து கொள்வார்கள்.

“தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே 

நாவினால் சுட்ட வடு”

என்ற திருக்குறளின் வாசகத்திற்கு ஏற்ப,  நமது உடலில் ஏற்படும் எப்படிப்பட்ட தீக்காயம் ஆனாலும், அது சில நாட்களில் ஆறிவிடும். ஆனால், நாவினால் பிறரை பார்த்து, பிறர் மனம் காயப்படும் வகையில், நாம் கூறுகிற ஒவ்வொரு வார்த்தையும், எவ்வளவு நாளானாலும், அது ஆறாத வடுவாய் நெஞ்சினில் பதிந்து  விடும்.

நாவு என்பதை பலரும் நெருப்புக்கு ஒப்பிட்டு பேசுகின்றனர். ஏனென்றால், இந்த நாவுக்கு அவ்வளவு சக்தி உள்ளானது. நாம் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையும் தான், நாம் எப்படிப்பட்டவர்கள் என்பதை நிர்ணயிக்கிறது. 

நம்மில் பலர் கிண்டலாக கூட சொல்வதுண்டு, ‘வாயை திறந்தால் தானே தெரியும் காக்காவா, குயிலான்னு’. நம்மில் அனைவரும் ஒரே மனிதர்கள் தான். நம் வாயில் இருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையும் தான், நம்மை நல்லவர்களாகவோ, கெட்டவர்களாகவோ பிரதிபலிக்கிறது. எனவே, நாவை அடக்கி ஆள கற்றுக் கொள்ளுங்கள்.  

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்